இன்று முழுவதும் இந்த புயல் வட திசையில், தமிழ்நாடு–புதுச்சேரி கடற்கரையை ஒட்டி நகரும் என கணிக்கப்பட்டுள்ளது. அதிகாலை நேரத்தில் சுமார் 50 கிமீ தூரத்திலும், மாலைக்குள் 25 கிமீ தூரத்திலும் கடற்கரையை மிக அருகில் கடக்கும் என வானிலை மையம் தெரிவித்துள்ளது. தமிழ்நாடு, புதுச்சேரி மற்றும் கரைக்கால் பகுதிகளில் மிக கனமழை முதல் கனமழை வரை மழை பெய்யும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கடலூர், நாகை, மயிலாடுதுறை, விழுப்புரம், செங்கல்பட்டு, புதுச்சேரி, கரைக்கால் மாவட்டங்களில் இன்று கனமழை முதல் மிக கனமழை பெய்யும் வாய்ப்பு அதிகம். தஞ்சை, திருவாரூர், புதுக்கோட்டை, திருச்சி, சேலம், கள்ளக்குறிச்சி, திருவண்ணாமலை, சென்னை, காஞ்சிபுரம், திருவள்ளூர், ராணிப்பேட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிக கனமழை பெய்யக்கூடும்.