Storm
6 கிமீ வேகத்தில் ஃபெஞ்சல் புயல்
கடந்த 7 மணி நேரமாக மணிக்கு 6 கிமீ வேகத்தில் பயணிக்கும் ஃபெஞ்சல் (Fengal) புயல் புதுவையில் இருந்து கிழக்கே 180 கிமீ தொலைவிலும், சென்னையில் இருந்து தென்கிழக்கே 190 கிமீ தொலைவிலும் நிலை கொண்டுள்ளது.
புயல் இன்று பகல் நேரத்தில் புதுவைக்கு அருகே மாமல்லபுரம் - புதுவை இடையே கரையை கடக்கக்கூடும் என்று கணிக்கப்பட்டுள்ளது. புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 90 கிமீ வேகத்தில் தரைக்காற்று வீசக்கூடும் என்பதால் மக்கள் பாதுகாப்பாக இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.
Heavy Rain
ரெட் அலர்ட்
ஃபெஞ்சல் காரணமாக தமிழகம், புதுவையின் பல்வேறு பகுதிகளில் கனமழை பெய்யக்கூடும் என்று வானிலை ஆய்வுமையம் எச்சரித்துள்ள நிலையில் தமிழகத்தின் சென்னை, திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம், விழுப்புரம், கள்ளகுறிச்சி, கடலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை முதல் மிககனமழை பெய்யக்கூடும் என்பதற்கான ரெட் அலர்ட் (Red Alert) விடுக்கப்பட்டுள்ளது.
இதே போன்று ராணிபேட்டை, திருவண்ணாமலை, வேலூர், திருவண்ணாமலை, அரியலூர், தஞ்சாவூர், திருவாரூர், மயிலாடுதுறை, நாகப்பட்டினம் மற்றும் காரைக்கால் ஆகிய மாவட்டங்களில் மிதமழை முதல் கனமழை (Heavy Rain) பெய்யக்கூடும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
ECR
மூடப்படும் ECR சாலை
புயல் புதுவைக்கு அருகே மாமல்லபுரம், காரைக்கால் இடையே கரையை கடக்கக்கூடும் என்பதால் புயல் கரையை கடக்கும் நேரத்தில் கிழக்கு கடற்கரைச் சாலை தற்காலிகமாக மூடப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
School Leave
விடுமுறை
ஃபெஞ்சல் புயல் காரணமாக கனமழை பெய்து வரும் நிலையில் புயல் கரையை கடக்கும் போது மழையின் தீவிரம் அதிகமாக இருக்கும் என்பதால் காஞ்சிபுரம், திருவள்ளூர், சென்னை, செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், கள்ளகுறிச்சி, மயிலாடுதுறை, ராணிபேட்டை ஆகிய மாவட்டங்களில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை (Holiday) அளிக்கப்பட்டுள்ளது.
வட்டமடிக்கும் விமானங்கள்
புயல் காரணமாக காற்றின் வேகம் அதிகரித்திருப்பதால் புனே, குவைத், மஸ்கட், மும்பை ஆகிய நகரங்களில் இருந்து சென்னைக்கு வந்த விமானங்கள் தரையிரங்க முடியாமல் வானில் வட்டமடித்தபடி இருக்கின்றன.
கனமழை மற்றும் காற்றின் சீற்றம் காரணமாக சிங்கப்பூர், திருச்சி, மங்களூரு உட்பட பல பகுதிகளில் இருந்து சென்னை வரும் 6 விமானங்கள் (Flights Cancelled) ரத்து செய்யப்பட்டுள்ளன. இதனிடையே திருச்சி, தூத்துக்குடி, மைசூரு, பெங்களூரு, அந்தமான் செல்லும் விமானங்கள் வழக்கம்போல் இயங்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.