இன்று இந்த மாவட்டங்களில் 20 செ.மீ. மழை பெய்யுமாம்! அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?

Published : Nov 29, 2024, 06:02 PM ISTUpdated : Nov 29, 2024, 06:04 PM IST

ஃபெஞ்சல் புயல் நாளை தமிழகத்தில் கரையை கடக்கும் என வானிலை ஆய்வு மையம் எச்சரித்துள்ளது. அதிகனமழை எதிர்பார்க்கப்படும் நிலையில், மீட்புப் பணிகள் தீவிரப்படுத்தப்பட்டு, நிவாரண முகாம்கள் தயார் நிலையில் உள்ளன.

PREV
17
இன்று இந்த மாவட்டங்களில் 20 செ.மீ. மழை பெய்யுமாம்! அரசு எடுத்த நடவடிக்கைகள் என்னென்ன?
cyclone fengal

வங்கக் கடலில்  உருவாகியுள்ள ஃபெஞ்சல் புயல் நாளை பிற்பகல் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடக்கும். புயல் கரையை கடக்கும் போது மணிக்கு 70 முதல் 90 கிலோ மீட்டர் காற்றின் வேகத்துடன் கரையைக் கடக்கக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.  இதனையடுத்து தமிழ்நாடு முதலமைச்சர் கனமழையினை எதிர்கொள்ள தேவையான அனைத்து ஆயத்த நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறும் நிலைமையை தொடர்ந்து கண்காணிக்குமாறும் மாவட்ட ஆட்சியர்களுக்கு அறிவுரை வழங்கியுள்ளார்.

27
KKSSR Ramachandran

வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ்.ஆர். ராமச்சந்திரன் இன்று காலை மாநில அவசரகால செயல்பாட்டு மையத்திற்கு வருகை புரிந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்துள்ள நிலையில், மீட்பு மற்றும் நிவாரண நடவடிக்கைகள் குறித்து ஆய்வு செய்து அலுவலர்களுக்கு அறிவுரைகளை வழங்கினார்.

இதையும் படிங்க: TN Heavy Rain Alert: இந்த 7 மாவட்டங்களில் நாளை ஏடாகூடமாக மழை பெய்யப்போகுதாம்! அப்படினா இன்னைக்கு!

37
Red Alert

ரெட் அலர்ட்

இன்று செங்கல்பட்டு, விழுப்புரம், கடலூர், மயிலாடுதுறை, திருவாருர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 20 செ.மீட்டருக்கு மேலாக அதிகனமழை பெய்யக்கூடும் என்றும், சென்னை, திருவள்ளூர், காஞ்சிபுரம், அரியலூர், தஞ்சாவூர் ஆகிய மாவட்டங்களில் 10 செ.மீட்டருக்கு மேலாக மிககனமழை பெய்யக்கூடும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. 

* இன்று காலை 8.30 மணி வரை சராசரியாக சென்னை 2.7 செ.மீ., செங்கல்பட்டு 0.76 செ.மீ., மயிலாடுதுறை 0.71 செ.மீ., திருவள்ளூர் 0.64 செ.மீ., நாகப்பட்டினம் 0.40 செ.மீ., திருவாரூர் 0.3 செ.மீ., காஞ்சிபுரம் 0.16 செ.மீ., தஞ்சாவூர் 0.09 செ.மீ., கடலூர் 0.06 செ.மீ. உள்ளிட்ட சில மாவட்டங்களில் மழை பெய்துள்ளது. குறிப்பாக சென்னை – சாத்தாங்காடு 6.1 செ.மீ., எர்ணாவூர் 5.8 செ.மீ., செங்கல்பட்டு - பல்லாவரம் 2.92 செ.மீ., செம்மஞ்சேரி 2.4 செ.மீ.,  திருவள்ளூர் - திருப்பாலைவனம் 2.56 செ.மீ., திருவெள்ளைவாயில் 2.56 செ.மீ., மழை பதிவாகியுள்ளது.

47
Relief Camps

நிவாரண முகாம்கள்

* அதிகனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மாவட்டங்களில் 2229 நிவாரண மைய கட்டடங்கள் தயாராக வைக்கப்பட்டுள்ளன. தற்போது திருவாரூர் மற்றும் நாகப்பட்டினம் மாவட்டங்களில் 6 நிவாரண முகாம்களில், 164 குடும்பங்களைச் சேர்ந்த 471 நபர்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.

இதையும் படிங்க:  மழையின் ஆட்டம் இனிமே தான் இருக்காம்! சென்னையே அலறப்போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் டேஞ்சர் அலர்ட்!

57
Rescue Squad

மீட்புப் படை

 தமிழ்நாடு முதலமைச்சர் உத்தரவின்படி ஏற்கனவே நாகப்பட்டினம், மயிலாடுதுறை, திருவாரூர், கடலூர் மற்றும் தஞ்சாவூர் மாவட்டங்களுக்கு பேரிடர் மீட்புப் படைகள் அனுப்பப்பட்டுள்ள நிலையில், இன்று செங்கல்பட்டு மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்புப் படையின் 1 குழுவும், தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் 2 குழுக்களும், விழுப்புரம் மாவட்டத்திற்கு தேசிய பேரிடர் மீட்பு படை மற்றும் தமிழ்நாடு பேரிடர் மீட்புப் படையின் தலா 1 குழுவும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

 

67
Fisherman

மீனவர்கள்

மீனவர்கள் கடலுக்கு செல்வதை தவிர்க்க மீன்வளத் துறை இயக்குநருக்கும், கடலோர மாவட்ட ஆட்சியர்களுக்கும் 23ம் தேதி அன்று அறிவுரை வழங்கப்பட்டுள்ளது. கிழக்கு கடற்கரையில் மீன்பிடிக்கச் சென்ற 4153 படகுகள் கரை திரும்பியுள்ளன.

77
Tamilnadu Government

கண்காணிப்பு அலுவலர்கள்

* தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களின் உத்தரவின்படி, கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ள மயிலாடுதுறை, நாகப்பட்டினம், திருவாரூர்,
தஞ்சாவூர் மற்றும் கடலூர் மாவட்டங்களில் மீட்பு மற்றும் நிவாரணப் பணிகளை மாவட்ட நிருவாகத்துடன் ஒருங்கிணைந்து மேற்கொண்டு வருகின்றனர்.

* இதுமட்டுமின்றி, இன்று செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், இராணிப்பேட்டை, வேலூர், திருவண்ணாமலை, தருமபுரி மற்றும் கிருஷ்ணகிரி
மாவட்ட கண்காணிப்பு அலுவலர்கள் அந்தந்த மாவட்டங்களுக்கு விரைந்துள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories