TNPSC
தமிழ்நாடு அரசின் பல்வேறு துறைகளில் கிராம நிர்வாக அலுவலர், இளநிலை உதவியாளர், தட்டச்சர், சுருக்கெழுத்து தட்டச்சர் உள்பட பல்வேறு பதவிகளில் காலியாகவுள்ள 6,244 காலியிடங்களை நிரப்புவதற்காக குரூப்-4 தேர்வு கடந்த ஜூன் 9ம் தேதி நடைபெற்றது. இந்த தேர்வை சுமார் 20 லட்சம் பேர் விண்ணப்பித்திருந்த நிலையில் தமிழகம் முழுவதும் 7,247 தேர்வு மையங்களில் மொத்தம் 15.8 லட்சம் பேர் குரூப் 4 தேர்வை எழுதினர்.
TNPSC Group 4 Exam
முதலில் 6,244 காலிப்பணியிடங்கள் மட்டும் அறிவிக்கப்பட்டு தொடர்ந்து தேர்வர்களின் கோரிக்கையை ஏற்று 3 முறை அதிகரிக்கப்பட்டு மொத்தம் 9,491 காலி பணியிடங்கள் உயர்த்தப்பட்டன. இந்த தேர்வு முடிவுகள் அக்டோபர் 28ம் தேதி வெளியானது.
certificate verification
இதனையடுத்து குரூப் 4 தேர்வில் தேர்ச்சி பெற்றவர்கள் சான்றிதழ் சரிபார்ப்பின்போது பின்பற்ற வேண்டிய வழிமுறைகளை டிஎன்பிஎஸ்சி வெளியிட்டிருந்தது. அதாவது வகுப்பு சான்றிதழ், மதிப்பெண் சான்றிதழ்கள், ஆதார் அட்டை உள்ளிட்டவற்றை ஆன்லைன் வழியாக சான்றிதழ் பதிவேற்றம் ( Onscreen Certificate Verification) செய்ய வேண்டியது அவசியம்.
TNPSC News
அதன்படி சான்றிதழ் பதிவேற்றத்திற்கு அனுமதிக்கப்பட்டவர்களின் பட்டியலை தேர்வாணையம் கடந்த நவம்பர் 7ம் தேதி வெளியிட்டது. அதன்படி சான்றிதழ் பதிவேற்றம் நவம்பர் 9 முதல் தொடங்கி 21ம் தேதி வரை நடைபெற்றது. தற்போது சான்றிதழ் பதிவேற்றம் முடிந்த நிலையில் தேர்ச்சி பெற்றவர்கள் கலந்தாய்வுக்கு தயாராகி வரும் நிலையில் டிஎன்பிஎஸ்சி முக்கிய அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.
TNPSC Group 4 Counseling
இதுகுறித்து தமிழ்நாடு அரசு பணியாளர் தேர்வாணையம் தனது எக்ஸ் தளத்தில்: டிஎன்பிஎஸ்சி குரூப் 4 பணியிடங்களுக்கான கலந்தாய்வு வரும் ஜனவரி மாதம் நடைபெறும் என்று அறிவித்துள்ளது. முதல் நாளில் 200 பேர், அடுத்தடுத்த நாட்களில் 200 பேர் என கலந்தாய்வுக்கு அழைக்க வாய்ப்பு இருப்பதாகவும் கூறப்பட்டுள்ளது. கலந்தாய்வு தேதி குறித்த அறிவிப்பு விரைவில் வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.