மழையின் ஆட்டம் இனிமே தான் இருக்காம்! சென்னையே அலறப்போகுதாம்! தமிழ்நாடு வெதர்மேன் டேஞ்சர் அலர்ட்!

First Published | Nov 29, 2024, 2:07 PM IST

வங்கக்கடலில் உருவாகும் ஃபெங்கல் புயல் காரணமாக சென்னை முதல் புதுச்சேரி வரை இன்று முதல் கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

Tamilnadu Heavy Rain

வடகிழக்கு பருவமழை தொடங்கி உள்ள நிலையில் தமிழகத்தில் உருவான முதல் புயலான ஃபெங்கல் புயல் போக்கு காட்டி வந்தது. முதலில் புயல் வலுவடையாமல் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலமாகவே கரையை கடக்கும் என கணிக்கப்பட்டது.  ஆனால் தற்போது மீண்டும் ஒரு முக்கிய தகவல் வெளியாகி பொதுமக்களை அதிர்ச்சியடைய செய்துள்ளது. 

Cyclone Fengal

அதாவது வங்கக்கடலில் நிலவும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் அடுத்த 3 மணி நேரத்தில் ஃபெங்கல் புயலாக உருவாகும். காற்றழுத்த தாழ்வு மண்டலம் மணிக்கு  8 கி.மீ வேகத்தில் நகர்ந்து வருகிறது என வானிலை மையம் தெரிவித்துள்ளது. மேலும் திருகோணமலைக்கு வடக்கு வடகிழக்கே சுமார் 270 கி.மீ., நாகைக்கு கிழக்கே 300 கி.மீ., புதுச்சேரிக்கு கிழக்கு தென்கிழக்கே 340 கி.மீ.,  சென்னைக்கு தென்கிழக்கே 380 கி.மீ தொலைவில் காற்றழுத்த தாழ்வு மண்டலம் மையம் கொண்டுள்ளது. இந்த புயல் கரையை கடக்கும் போது 90 கிலோ மீட்டர் வேகத்திலும் வீசக்கூடும் எனவும் எச்சரிக்கப்பட்டுள்ளது.

Latest Videos


Tamilnadu Weatherman

இந்நிலையில் சென்னை முதல் புதுச்சேரி வரையிலான பகுதிகளில் இன்று அதி கனமழை பெய்யும் என தமிழ்நாடு வெதர்மேன் அதிர்ச்சி தகவலை தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக தமிழ்நாடு வெதர்மேன் பிரதீப் ஜான் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: வங்கக்கடலில் புயல் உருவாகும் நிலையில் இன்று சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர் பகுதியில் இன்று மாலை அல்லது இரவு முதல் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. 

Tamilnadu Weatherman Pradeep John

இந்த புயல்  சென்னை முதல் புதுச்சேரி பெல்ட் வரை மிக மிக கனமழையைக் கொடுக்கப் போகிறது. நாளை புயல் கரையை கடக்கும்போது வட தமிழக கடலோர மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்புள்ளது. நாளை மிகுந்த எச்சரிக்கையுடன் இருக்க வேண்டும் மற்றும் ஞாயிற்றுக்கிழமை வரை மழை நீடிக்கும் வாய்ப்புகள் உள்ளதாக எச்சரித்துள்ளார். எனவே, விழிப்புடன் இருங்கள் என்றும் மக்களை கேட்டுக்கொண்டுள்ளார். 

click me!