கோயில் திருவிழாவில் பயங்கரம்.. கிரேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி.. 8 பேர் படுகாயம்..!

Published : Jan 23, 2023, 09:26 AM ISTUpdated : Jan 23, 2023, 10:44 AM IST

அரக்கோணம் அருகே நெமிலியில் உள்ள மண்டியம்மன் கோயில் திருவிழாவில் ஏற்பட்ட கிரேன் விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. 

PREV
15
கோயில் திருவிழாவில் பயங்கரம்.. கிரேன் கவிழ்ந்து விபத்து.. 4 பேர் ரத்த வெள்ளத்தில் பலி.. 8 பேர் படுகாயம்..!

ராணிப்பேட்டை மாவட்டம் நெமிலி வட்டம் கீழ்வீதி கிராமத்தில் நேற்று இரவு திரௌபதி அம்மன் கோயிலில் திருவிழா நடைபெற்றுள்ளது. இந்த, விழாவில் பக்கத்து ஊர்களை சேர்ந்த பொதுமக்கள் திரளானோர் கலந்து கொண்டனர். அப்போது கிரேனில் தொங்கியபடி சுவாமிக்கு மாலை அணிவிக்க பக்தர் முயற்சி செய்துள்ளனர்.

25

அப்போது எதிர்பாராத விதமாக கிரேன் கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. இந்த விபத்தில் அந்தரத்தில் தொங்கியபடி வந்த பள்ளி மாணவன் ஜோதி பாபு கீழே விழுந்து உயிரிழந்தார். மேலும், வேடிக்கை பார்த்துக்கொண்டிருந்த முத்து(40), பூபாலன்(45) ஆகியோர் ரத்த வெள்ளத்தில் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். 

35

இந்த விபத்தில் ஒரு பெண் குழந்தை உட்பட 9 பேர்  படுகாயமடைந்தனர். உடனே படுகாயமடைந்தவர்களை மீட்டு அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று தீவிர சிகிச்சை அளித்து வந்தனர். ஆனால், சிகிச்சை பலனின்றி  சின்னசாமி (85) என்பவர் உயிரிழந்தார். 

45

இதனால், கிரேன் கவிழ்ந்த விபத்தில் உயிரிழந்தோர் எண்ணிக்கை 4ஆக உயர்ந்துள்ளது. சிலர் ஆபத்தான நிலையில் இருப்பதால் பலி எண்ணிக்கை மேலும் அதிகரிக்கக்கூடும் என அஞ்சப்படுகிறது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து  கிரேன் ஆபரேட்டர் கைது செய்யப்பட்டுள்ளார். 

55

கோயில் திருவிழாவில் கிரேன் கவிழ்ந்து விபத்து ஏற்பட்ட புகைப்படங்கள் வைரலாகி வருகிறது. கோவில் திருவிழாவில்  கிரேன் கவிழ்ந்த விபத்தில் பக்தர்கள் உயிரிழந்த சம்பவம் ெபரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories