தமிழ்நாட்டினர் மட்டுமின்றி வடமாநிலங்களில் இருந்தும் ஏராளமானோர் சென்னையில் இருந்து ராமேஸ்வரம் செல்வதால், சென்னையில் இருந்து ராமேஸ்வரத்துக்கு கூடுதல் ரயில் இயக்க வேண்டும் என பக்தர்கள், சுற்றுலா பயணிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். பயணிகளின் கோரிக்கைக்கு செவிமடுத்த ரயில்வே அமைச்சகம் ராமேஸ்வரம் தாம்ப்ரம் இடையே புதிய ரயில் இயக்க ஒப்புதல் அளித்துள்ளது.
தாம்பரம் ராமேஸ்வரம் இடையேயான 'பாம்பன்' எக்ஸ்பிரஸ் ரயில் தாம்பரத்தில் இருந்து தினமும் மாலை 6.10 மணிக்கு புறப்படும். இந்த ரயில் செங்கல்பட்டு, விழுப்புரம், திரிப்பாதிபுலியூர், மயிலாடுதுறை, திருவாரூர், திருத்துறைப்பூண்டி, பட்டுக்கோட்டை, அறந்தாங்கி, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, பரமக்குடி, ராமநாதபுரம் வழியாக சென்று ராமேஸ்வரத்துக்கு மறுநாள் அதிகாலை 5.40 மணிக்கு சென்றடையும்.