அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.? முதலமைச்சருக்கு சென்ற முக்கிய கடிதம்

Published : Apr 06, 2025, 08:23 AM IST

மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை உயர்த்த வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். இது தொடர்பாக முதலமைச்சருக்கு அரசு ஊழியர் சங்கம் கடிதம் எழுதியுள்ளது.

PREV
15
அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு.? முதலமைச்சருக்கு சென்ற முக்கிய கடிதம்

Dearness Allowance for Government Employees தமிழக அரசு எந்த ஒரு திட்டங்களையும் அறிவித்தாலும் அந்த திட்டங்கள் மக்களுக்கு சென்று சேர்வதற்கு அரசு ஊழியர்களின் பங்கு முக்கியமானது. எனவே அரசு ஊழியர்களுக்கு பல்வேறு திட்டங்களை தமிழக அரசு செயல்படுத்தி வருகிறது. இந்த நிலையில் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும், ஊதிய உயர்வு, பணி நியமனம் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறது. இந்த நிலையில் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக அகவிலைப்படியை வழங்க வேண்டும் என தமிழக அரசு ஊழியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர்.

25
tamilnadu government

அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு

அதற்கு ஏற்றார் போல் தமிழக அரசும் அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படியை அறிவித்து வருகிறது. இந்த நிலையில் தற்போது மத்திய அரசு ஊழியர்களுக்கு 2% அகவிலைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதனை தமிழக அரசு ஊழியர்களுக்கு வழங்க கோரி முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் சங்கம் சார்பாக கடிதம் எழுதப்பட்டுள்ளது. தமிழ்நாடு அரசு அலுவர் ஒன்றியம் தமிழக முதலமைச்சருக்கு எழுதியுள்ள கடிதத்தில், தொழிற்சங்க வரலாற்றில் 105 ஆண்டுகள் பாரம்பரியமிக்கதும்,

35
Dearness Allowance Hike

முதலமைச்சருக்கு அரசு ஊழியர்கள் கோரிக்கை

தமிழ்நாடு அரசால் அங்கீகரிக்கப்பட்ட பொதுச் சங்கங்களில் முதன்மை சங்கமாகவும் திகழும் தமிழ்நாடு அரசு அலுவலர் ஒன்றியம் சார்பில் கீழ்க்காணும் கோரிக்கையினை தங்களின் கனிவான பார்வைக்காகவும், சாதகமான நடவடிக்கைக்காகவும் சமர்ப்பிக்கின்றோம். மத்திய அரசு தனது அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்களுக்கு விலைவாசி உயர்வினை ஈடு கட்டும் விதமாக அகவிலைப்படி உயர்வினை 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்த்தி வழங்குவதாக மத்திய அரசின் அமைச்சரவை கூட்டத்தில் முடிவெடுக்கப்பட்டு, பார்வையில் கண்டுள்ளவாறு அறிவிப்பும் செய்துள்ளது.

45
Dearness Allowance

2 சதவீதம் அகவிலைப்படி உயர்வு

தமிழ்நாட்டில் பணிபுரியும் அரசு அலுவலர்களின் அடிமை விலங்கொடித்த ஆபிரகாம் லிங்கன் என போற்றப்பட்ட டாக்டர் கலைஞர் ஆட்சியினை தொடர்ந்து நடத்தி வரும் தமிழ்நாடு முதலமைச்சர், தமிழ்நாடு அரசில் பணிபுரியும் அரசு அலுவலர்கள், ஆசிரியர்கள், ஓய்வூதியகாரர்கள், குடும்ப ஓய்வூதியதாரர்கள்,

சிறப்பு கால முறை ஊதியத்தில் பனிபுரியும் பணியாளர்கள். தொகுப்பூதியம். மதிப்பூதியத்தில் பணிபுரியும் பணியாளர்களுக்கு 01.01.2025 முதல் 2 சதவீதம் அகவிலைப்படி உயர்வினை அதாவது 53 சதவீதத்திலிருந்து 55 சதவீதமாக உயர்த்தி வழங்க வேண்டுமாய் கேட்டுக்கொள்வதாக அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

55
DA hike request

தாமதம் இன்றி உடன் அறிவியுங்கள்

மேலும் அரசுப்பணியில் நேரம், காலம் பாராமல் உழைக்கின்றவர்களுக்கு அகவிலைப்படி உயர்வினை அரசு அறிவிப்பு செய்தால் இன்னும் கூடுதல் உத்வேகத்துடன் பணிபுரிவார்கள் என்பதால் தாமதம் இன்றி உடன் அறிவித்திட வேண்டுமாய் அன்புடன் கேட்டுக்கொள்வதாகவும் கூறப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories