எனக்கு நீ வேணும்! அந்த டிரஸ் போட்டுக்கிட்டு தலை நிறைய பூ வச்சுக்கிட்டு வா! ஜொல்லு விட்ட பேராசிரியருக்கு ஆப்பு!

Published : Sep 12, 2025, 04:29 PM IST

Arignar Anna Government Arts College: முசிறி அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பார்வை குறைபாடுள்ள மாணவி ஒருவரிடம் பேராசிரியர் நாகராஜன் பாலியல் ரீதியாக தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுதொடர்பாக ஆடியோ பதிவு வெளியாகியுள்ளது. 

PREV
14
பாலியல் குற்றங்கள்

தமிழகத்தில் பாலியல் குற்றச்சாட்டு சம்பவங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. என்னதான் தமிழக அரசு பல்வேறு எச்சரிக்கை விடுத்தாலும் பள்ளி மாணவர்கள், கல்லூரி மாணவிகள் மீதான பாலியல் குற்றங்கள் குறையவில்லை. இந்நிலையில் முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக் கல்லூரியில் பேராசிரியர் ஒருவர் கல்லூரி மாணவிக்கு பாலியல் ரீதியாக செல்போனில் தொல்லை கொடுத்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

24
அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி

திருச்சி மாவட்டம் முசிறியில் அறிஞர் அண்ணா அரசு கலைக்கல்லூரி இயங்கி வருகிறது. இக்கல்லூரியில் தமிழ் துறையின் பேராசிரியராக பணிபுரிந்து வருபவர் நாகராஜன். இந்நிலையில் தமிழ்துறையில் மூன்றாம் ஆண்டு படித்து வரும் பார்வை குறைபாடு உள்ள மாற்றுத்திறனாளி மாணவி ஒருவரிடம் பேராசிரியர் நாகராஜன் செல்போனில் பாலியல் ரீதியாக தனது விருப்பத்திற்கு உடன்பட வேண்டும் என பலமுறை தொந்தரவு செய்து பேசும் ஆடியோ பதிவு வைரலாகி உள்ளது.

34
பேராசிரியர்

அதில் என் கூட இருப்பியா இருக்க மாட்டியா. உன்கிட்ட இருந்து எல்லா விஷயம் கிடைக்குமா? கிடைக்காதா? உன்னை கட்டி பிடிக்க கூடாது, முத்தம் கொடுக்கக் கூடாது என்றால் எதுக்கு பழகணும் சொல்லு என்று செல்போனில் அந்த மாணவிகளிடம் பேராசிரியர் கேட்கிறார். இப்படி தொடர்ந்து பேராசிரியர் பேசி தொந்தரவு செய்ததால் அந்த மாணவி தோழிகளிடம் கூறியுள்ளார். அப்போது தோழிகள் எப்பவும் போல அவரிடம் நெருக்கமாக பேசுவது போல பேசு. அப்போதுதான் அவர் எந்த நோக்கத்திற்காக உன்னிடம் பேசுகிறார் என்பது தெரிய வரும். அதை எல்லாம் ஆடியோ ரெக்கார்ட் செய்த பிறகு புகார் கொடுக்கலாம் என ஐடியா கொடுத்துள்ளனர். இதனைத் தொடர்ந்து மாணவியும் அவரிடம் நெருக்கமாக பேசுவது போல பேசியதாக கூறப்படுகிறது.

44
தமிழ் துறை பேராசிரியர் நாகராஜன்

இதுகுறித்து கல்லூரி முதல்வர் கணேசனிடம் கேட்டதற்கு மாணவியிடம் தமிழ் துறை பேராசிரியர் நாகராஜன் பேசிய குரல் பதிவு குறித்து எனது கவனத்திற்கு வந்தது. இதையடுத்து திருச்சி மண்டல கல்லூரி இணை இயக்குனரிடமிருந்து கொடுக்கப்பட்ட அறிவுரையின் படி கல்லூரி உள் புகார் பாதுகாப்பு கமிட்டி மற்றும் மூத்த பேராசிரியர்கள் கொண்ட குழு என இரு விசாரணை நடைபெற்றுள்ளது. ஆர்ஜே.டி நேரில் வந்து விசாரணை செய்ய இருக்கிறார். முதற்கட்ட விசாரணையில் தமிழ் துறை பேராசிரியரின் தவறு உறுதி செய்யப்பட்டுள்ளது என முதல்வர் கணேசன் தெரிவித்தார். இந்நிலையில் தமிழ் துறை மூன்றாம் ஆண்டு மாணவிகளிடம் பாலியல் ரீதியான நோக்கத்துடன் தொந்தரவு செய்த பேராசிரியர் நாகராஜன் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கல்லூரி முதல்வரிடம் நேரில் சந்தித்து மாணவ, மாணவிகள் வலியுறுத்தியுள்ளனர்.

Read more Photos on
click me!

Recommended Stories