கொட்டிக்கிடக்கும் தக்காளி, வெங்காயம்.! ஒரு கிலோ இவ்வளவுதானா.? கூடை கூடையாக அள்ளும் பெண்கள்

சமையலுக்கு அத்தியாவசியமான தக்காளி மற்றும் வெங்காயத்தின் விலை கடும் சரிவை சந்தித்துள்ளது. விளைச்சல் அதிகரிப்பால் விவசாயிகள் தக்காளியை பறிக்காமல் விட்டு விடுகிறார்கள். பொதுமக்கள் குறைந்த விலையில் காய்கறிகளை வாங்கி செல்கின்றனர்.

Prices of tomatoes and onions have fallen in Tamil Nadu KAK

Tomato And Onion Price : காய்கறிகள் தான் சமையலுக்கு முக்கிய தேவையாக உள்ளது. வாரத்தின் பெரும்பாலான நாட்கள் காய்கறிகள் சமையல் தான் வீட்டில் செய்யப்படுகிறது. எனவே காய்கறின் தேவை தினந்தோறும் அதிகரித்து வருகிறது. அந்த வகையில் காய்கறிகளின் உற்பத்தியும் அதிகரிக்கப்பட்டுள்ளது. ஒரு சில நேரங்களில் காய்கறிகளின் விளைச்சல் பாதிக்கப்பட்டால் காய்கறி வரத்து பெரும் அளவில் குறையும், இதனால் விலையும் பல மடங்கு அதிகரிக்கும். அந்த வகையில் பல்வேறு காய்கறிகளின் வகைகள் இருந்தாலும் சமையலுக்கு அத்தியாவசிய தேவையாக இருப்பது தக்காளி மற்றும் வெங்காயம், இந்த இரண்டு காய்கறிகள் இல்லாமல் எந்த சமையலும் செய்ய முடியாது.

Prices of tomatoes and onions have fallen in Tamil Nadu KAK
தக்காளி, வெங்காயம் விலை

அந்த வகையில் ரசம் வைப்பது முதல் பிரியாணி சமைப்பது வரை தக்காளி மற்றும் வெங்காயத்தின் தேவை அதி முக்கியமாகும். இந்த நிலையில் சில மாதங்களுக்கு முன்பாக உச்சத்தில் இருந்த விலையானது தற்போது கடும் சரிவை சந்தித்துள்ளது. அந்த வகையில் தக்காளி விளைச்சல் அதிகரிப்பால் ஒரு கிலோ 5 ரூபாய்க்கு கூட விற்பனை செய்யப்படாமல் இருப்பதால் தக்காளியை பறித்து விற்பனை செய்வதற்கு கூடுதல் செலவு ஏற்படுவதால் தக்காளியை அந்த செடியிலேயே விவசாயிகள் பறிக்காமல் விட்டு விடுகிறார்கள். 


குறைந்தது வெங்காயம் விலை

 இதே போல வெங்காயத்தின் விலையும் குறைந்துள்ளது. அந்த வகையில் கடந்த இரண்டு மாதங்களுக்கு முன்பாக ஒரு கிலோ வெங்காயம் 100 முதல் 120 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் இன்று 100 ரூபாய்க்கு 4 முதல் 5 கிலோ வரை வெங்காயம் விற்பனை செய்யப்படுகிறது. மேலும் தக்காளியும் 50 ரூபாய்க்கு 4 கிலோ வரை விற்பனையாகிறது. எனவே இது தான் நல்ல சான்ஸ் என பொதுமக்கள் பை நிறைய தக்காளி மற்றும் வெங்காயத்தை வாங்கி செல்கிறார்கள். இதே போல பச்சை காய்கறிகளின் விலையும் சரிவை சந்தித்ததுள்ளது. 

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 10 முதல் 15 ரூபாய்க்கும், பச்சை மிளகாய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வாழைப்பூ ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், குடை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், சுரைக்காய்  ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

குறைந்தது பச்சை காய்கறிகளின் விலை

அவரைக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 50 ரூபாய்க்கும்,  முருங்கைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், பீன்ஸ்  45 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
 

இன்றைய காய்கறி விலை நிலவரம்

இஞ்சி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனையாகிறது

Latest Videos

vuukle one pixel image
click me!