தக்காளி, வெங்காயம் விலை மீண்டும் கிடு, கிடுவென உயர்வு.! கோயம்பேடு சந்தையில் காய்கறி விலை நிலவரம் என்ன.?

First Published | Oct 27, 2023, 9:46 AM IST

காய்கறிகளின் வரத்தை பொறுத்து விற்பனை விலையானது மாற்றி அமைக்கப்படுகிறது. அந்த வகையில் தக்காளி மற்றும் இஞ்சியின் வரத்து குறைந்துள்ளதன் காரணமாக விற்பனை விலையானது அதிகரித்துள்ளது. இது வரும் நாட்களில் மேலும் அதிகரிக்க வாய்ப்பு இருப்பதாக கூறப்படுகிறது. 
 

காய்கறி விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் காய்கறிகள் விலை சற்று உயர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 20 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கோவக்காய் ஒரு கிலோ 27 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

கத்தரிக்காய் விலை

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 45ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், மாங்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.
 

Tap to resize

கேரட் ஒரு கிலோ என்ன.?

கொத்தவரை ஒரு கிலோ 25 ரூபாய்க்கும்,  காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும்,  சுரைக்காய் ஒரு கிலோ 20 ரூபாய்க்கும்,  பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும்,  குடைமிளகாய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும் விற்பனையாகிறது.

உயரும் வெங்காயம் விலை

கடந்த சில நாட்களாக வெங்காயத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது.  அந்த வகையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  சின்ன வெங்காயம் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

அதிகரிக்கும் தக்காளி விலை

கடும் வீழ்ச்சியை சந்தித்து இருந்த தக்காளி விலையானது மீண்டும் அதிகரிக்க தொடங்கியுள்ளது. அந்த வகையில் ஒரு கிலோ தக்காளி நேற்று 20 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்ட நிலையில் தற்போது 30 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.

இஞ்சின் விலையானது கடந்த சில வாரங்களாக உச்சத்தில் இருந்து தற்போது படிப்படியாக குறைந்து ஒரு கிலோ இஞ்சி 120 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

குட்நியூஸ்.. இன்று பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை.. என்ன காரணம் தெரியுமா?

Latest Videos

click me!