power cut
சென்னையில் மின் தடை
மின் வெட்டு ஏற்படாமல் இருக்க பராமரிப்பு பணியானது மிகவும் அவசியம், அந்த வகையில், மின் மாற்றி புதிதாக அமைப்பது. மின் கம்பங்கள் சீரமைப்பது உள்ளிட்ட பணிகளை தினந்தோறும் மின் வாரிய ஊழியர்கள் ஈடுபட்டு வருகின்றனர். அந்த வகையில் சென்னையில் இன்று முக்கியமான ஒரு சில இடங்களில் மின் வெட்டு செய்யப்பட இருப்பதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அந்த வகையில் பராமரிப்புப் பணிக்காக வெள்ளிக்கிழமை (27.10.2023) காலை 09.00 மணி முதல் மதியம் 02.00 மணி வரை மின் விநியோகம் நிறுத்தப்படும் என கூறப்பட்டுள்ளது.
தேனாம்பேட்டை:
போயஸ் கார்டன், இளங்கோ சாலை, எல்டாம்ஸ் சாலை, காமராஜர் சாலை, பாரதியார் தெரு, டிடிகே சாலை, கதீட்ரல் சாலை, ஜேஜே சாலை, பார்த்தசாரதி கார்டன், எச்டி ராஜா தெரு, வீனஸ் காலனி, மூரேஸ்கேட் சாலை மற்றும் மேற்கண்ட இடங்களைச் சுற்றியுள்ள அனைத்துப் பகுதிகளும் மின்சாரம் தடை செய்யப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. பராமரிப்பு பணிகள் முடிவடைந்தால், பிற்பகல் 02.00 மணிக்கு முன் விநியோகம் மீண்டும் தொடங்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.