எதிர்பாராத ட்விஸ்ட்..! முதலமைச்சர் விஜய் முகத்திற்கு நேராக யோசிக்காமல் கேள்வி கேட்ட பிரேமலதா.!

Published : May 13, 2026, 11:30 AM ISTUpdated : May 13, 2026, 11:35 AM IST

Premalatha Vs TVK Vijay: சட்டப்பேரவையில் பேசிய தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா முதல்வர் விஜய்யின் சில ஆரம்பக்கட்ட நடவடிக்கைகளை வரவேற்றார். இருப்பினும், மிஸ்டர் ரத்தன் பண்டிட்டை 'ராஜகுரு' எனக் குறிப்பிட்டு அரசுப் பதவியில் அமர்த்தியதற்கு கடும் கண்டனம்.

PREV
14
தவெக மீதான நம்பிக்கை வாக்கெடுப்பு

தமிழக சட்டப்பேரவையில் முதல்வர் விஜய்யின் பெருபான்மையை நிரூபிப்பதற்கான வாக்கெடுப்பு விறுவிறுப்பாக இன்று நடைபெற்று வருகிறது. இந்த தீர்மானத்தின் மீது ஒவ்வொரு கட்சியை சேர்ந்த சட்டமன்ற உறுப்பினர்கள் உரையாற்றி வருகின்றனர். இந்நிலையில் தீர்மானத்தின் போது தேமுதிக எம்எல்ஏ பிரேமலதா விஜயகாந்த் பேசுகையில்: எதிர்க்கட்சிகளை எதிரிக் கட்சியாக நினைக்காமல் அனைவரையும் சந்தித்து அரசியலில் ஒரு மாண்பையும் மரபையும் நீங்கள் ஏற்படுத்தி இருப்பது வரவேற்கத்தக்கது. அதுபோல உங்களுடைய முதல் அறிவிப்பிலேயே சிங்கப்படை பெண்களைப் பாதுகாக்கவும், மதுக்கடைகளை மூடுவோம் என்று சொன்னதும் மக்களால் வரவேற்கப்பட்டது. அந்த வகையில் முதலில் 717 மதுக்கடைகளை மூடியது ஒட்டுமொத்த தமிழக மக்களால் வரவேற்கப்பட்டது.

24
குதிரை பேரம்

முதல்வர் அன்றைக்கு சொன்னது இங்கே முகம் மூடி யாரும் செல்ல வேண்டிய அவசியம் இல்லை, அனைவருக்கும் ஒரு வெளிப்படையான ஆட்சிதான் செய்வோம் என்று அப்படியிருக்கையில் முதல்வர் அவர்களைச் சந்திக்க யார் முகத்தை மூடிக்கொண்டு அன்று வாகனத்தில் சென்றார்கள் என்பதை நிச்சயமாக மக்களுக்கு தெரியப்படுத்த வேண்டும் என்பதை இந்த நேரத்தில் நான் கேட்டுக்கொள்கிறேன். குதிரை பேரம் நடந்ததாக ஏராளமானோர் கூறியிருக்கும் நிலையில் அது குறித்து பேச வேண்டும். தமிழ்நாடு அரசியல் வரலாற்றில் இதுவரை இல்லாத ஒரு மோசமான நிகழ்வு தற்போது நடந்துள்ளது. இந்த செயல் மிகுந்த வேதனையை தருகிறது.

34
ராஜகுரு மிஸ்டர் ரத்தன் பண்டிட்

மேலும் அரச குடும்பத்தில் இருந்து வந்தவன் இல்லை என முதல்வர் விஜய் சொல்லும்போது அனைவரும் வரவேற்றார்கள். ஆனால் இன்றைக்கு அவருடைய ராஜகுருவாக இருக்கும் மிஸ்டர் ரத்தன் பண்டிட்டை அரசு பதவியில் அமர்த்தியதற்கு ஒட்டுமொத்த தமிழ்நாட்டு மக்கள் சார்பாக வன்மையான கண்டங்களை தெரிவித்துக் கொள்கிறேன்.

44
அரசுப் பதவி எதற்கு?

உங்கள் ராஜகுருவா இருந்தால் உங்கள் பர்சனலாக வைத்துக் கொள்ளுங்கள். அரசுப் பதவி எதற்கு? இதன்மூலம் உங்களை நம்பி வாக்களித்த மக்களுக்கும் இளைஞர்களுக்கும் என்ன மெசேஜ் சொல்கிறீர்கள்? இதற்கு முதலமைச்சர் நிச்சயம் விளக்கம் கொடுத்தே ஆக வேண்டும் என தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories