Power Cut in Tamilnadu: தமிழகத்தில் தடையற்ற மின்சாரம் வழங்க, மாதாந்திர பராமரிப்பு பணிகளுக்காக மே 1 மற்றும் 2 தேதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படுகிறது. கோவை, உடுமலைப்பேட்டை, பெரம்பலூர் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
தமிழக முழுவதும் தடையில்லா மின்சாரம் வழங்குவதற்காக துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணி காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும். பொதுமக்கள் மோட்டார், செல்போன், லேப்டாப்பில் சார்ஜ் போடும் வகையில் முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி மே 1 மற்றும் மே 2ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின்தடை, எத்தனை மணிநேரம் என்பதை விரிவாக பார்க்கலாம்.
26
மே 1
கோவை
சூலூர் பகுதி, தொழிற்பேட்டை, நீலம்பூர் பகுதி, லட்சுமி நகர், குளத்தூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளில் மின்தடை செய்யப்படும்.
36
உடுமலைப்பேட்டை
தேவனூர்புதூர், செல்லம்பாளையம், கரட்டூர், ராவணபுரம், ஆண்டியூர், பாண்டியங்கரடு, அரிசனம்பட்டி, வல்லகுண்டபுரான், எஸ்.நல்லூர், அர்த்தநாரிபாளையம், புங்கமுத்தூர், வளையபாளையம், தீபாலபட்டி உள்ளிட்ட கூற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.
எம்ஜிசி பாளையம், பொன்னேகவுண்டர்புதூர், எம்.ராயர்பாளையம், சுண்டமேடு, சென்னபசெட்டிபுதூர், மன்னிக்கம்பாளையம், கல்லிபாளையம், தொட்டியனூர், ஊரைக்கல்பாளையம் உள்ளிட்ட பகுதிகளில் மின் விநியோகம் நிறுத்தப்படும்.
56
உடுமலைப்பேட்டை
கிழவன்காட்டூர், எலியமுத்தூர், பெரிசனம்பட்டி, கல்லாபுரம், செல்வபுரம், புச்சிமேடு, மானுபட்டி, கொமரலிங்கம், அமராவதிநகர், கோவிந்தபுரம், அமராவதி செக்போஸ்ட், பேரும்பள்ளம், தும்பளப்பட்டி, குருவப்பநாயக்கனூர், ஆலாம்பாள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளும் அடங்கும்.
66
பெரம்பலூர்
பேராலி, கல்பாடி, அஸூர், கே. புதூர் உள்ளிட்ட பகுதிகளில் மே 2ம் தேதி செவ்வாய் கிழமை காலை 9 மணி முதல் மாலை 4 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.