பல இடங்களில் மின்வெட்டு.. எதிர்பார்த்ததைவிட அதிக மழை.. ஆடிப்போன வளசரவாக்கம் - ரெயின் அப்டேட்ஸ்!

First Published Dec 4, 2023, 8:04 AM IST

Chennai Rains : மிக்ஜாம் புயல் சென்னையை பெரிய அளவில் தாக்கி வரும் நிலையில் நேற்று இரவு முதல் விடிய விடிய பல இடங்களில் கன மழை கொட்டி தீர்த்து வருகிறது.

Chennai Rain Update

சென்னைக்கு தென்கிழக்கு பகுதியில் சுமார் 150 கிலோ மீட்டர் தொலைவில் தற்பொழுது மிக்ஜாம் மையம் கொண்டுள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. ஆகவே எண்ணூர் துறைமுகத்தில் தற்பொழுது அதிகபட்சமாக 75 கிலோமீட்டர் வேகத்திலும், மீனம்பாக்கம் மற்றும் நுங்கம்பாக்கத்தில் சுமார் 40 கிலோ மீட்டர் வேகத்திலும் காற்றின் அளவு பதிவாகி வருகிறது. 

ஏசியாநெட் தமிழ் செய்திகளைஉடனுக்கு உடன்  Whatsapp Channel-லில் பெறுவதற்கு கீழே கொடுக்கப்பட்டு இருக்கும் லிங்குடன் இணைந்து இருக்கவும்.

Anna Salai Chennai

இதனை அடுத்து இன்று அதிகாலை 6:00 மணி வரை பெய்த மழையின் அளவு படி அதிகபட்சமாக வளசரவாக்கத்தில் சுமார் 203.1 மில்லி மீட்டர் அளவிலான மழை பெய்துள்ளது. மலர் காலணியில் 194 மில்லி மீட்டரும், பெருங்குடியில் 189 மில்லி மீட்டரும், கோடம்பாக்கத்தில் 179 மில்லி மீட்டரும் மழை பெய்துள்ளது என்று அறிவிக்கப்பட்டுள்ளது. 

Latest Videos


Chennai Rain Updates

திரு.வி.க நகர், முகலிவாக்கம், ஐஸ் ஹவுஸ் மற்றும் அண்ணா நகர் உள்ளிட்ட இடங்களிலும் 140 மில்லி மீட்டர் என்கின்ற அளவை தாண்டி மழை கொட்டி தீர்த்துள்ளது. இதனால் அடையாறு, சோளிங்கநல்லூர், கோடம்பாக்கம், வளசரவாக்கம் உள்ளிட்ட பல பகுதிகளில் தொடர் மின்வெட்டும் ஏற்பட்டு வருகிறது. மீட்பு படையினர் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர்.

Cyclone Michaung Chennai :சென்னையை மிரள விடும் மிக்ஜாம்! சூறாவளி காற்றோடு இரவு முழுவதும் வெளுத்து வாங்கும் மழை

click me!