Vegetables Price Today : அதிகரிக்கும் பெரிய வெங்காயம் விலை..! கோயம்பேட்டில் காய்கறிகள் விலை நிலவரம் என்ன.?

First Published Dec 1, 2023, 7:48 AM IST

பல்வேறு மாவட்டங்கள் மற்றும் மாநிலங்களில் இருந்து காய்கறிகள் சென்னை கோயம்பேடு மொத்த காய்கறி சந்தைக்கு கொண்டு வரப்படுகிறது. அந்த வகையில் ஒரு சில காய்கறிகளின் வரத்து குறைந்துள்ளதால் விற்பனை விலையானது சற்று அதிகரித்துள்ளது. 

Vegetables Price Today

வெங்காயம் விலை என்ன.?

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் 1 கிலோ 35 ரூபாய்க்கும், உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

அவரைக்காய் விலை என்ன.?

குடைமிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65க்கும்,  அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 10 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

Latest Videos


முருங்கைக்காய் விலை என்ன.?

காலிஃப்ளவர் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தேங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 90-க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

உச்சத்தில் இஞ்சி விலை

பீன்ஸ் ஒரு கிலோ 45க்கும், இஞ்சி ஒரு கிலோ 150 முதல் 220 வரைக்கும், மாங்காய் ஒரு கிலோ 80 ரூபாய்க்கும், வெண்டைக்காய் 1 கிலோ 30 ரூபாய்க்கும், பூசணி ஒரு கிலோ 25க்கும், பீர்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கு விற்பனையாகிறது.

இதையும் படியுங்கள்

தமிழகத்தின் 14 மாவட்டங்களில் நள்ளிரவிலும் கனமழை தொடரும்: வானிலை ஆய்வு மையம் எச்சரிக்கை

click me!