மாதத்தின் முதல் நாளே இப்படியா? தமிழகத்தில் நாளை 5 முதல் 8 மணி நேரம் வரை மின்தடை! வெளியான அறிவிப்பு!

Published : Oct 31, 2025, 09:24 AM IST

Power Cut: தமிழ்நாடு மின்சார வாரியம் மாதாந்திர பராமரிப்புப் பணிகள் காரணமாக நவம்பர் 1ம் தேதி மின்தடை அறிவித்துள்ளது. கோவை, பெரம்பலூர், திருச்சி, மற்றும் வேலூர் உள்ளிட்ட மாவட்டங்களில் காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
16
வடகிழக்கு பருவமழை

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் இருந்து பல்வேறு இடி, மின்னலுடன் கூடிய கனமழை வெளுத்து வாங்கி வருவதால் அவ்வப்போது மின்தடை செய்யப்பட்டு வருகிறது. குறிப்பாக கிராமப்புறங்களில் மிதமான மழை பெய்தாலே போதும் உடனே கரண்ட் கட் செய்து விடுகின்றன.

26
மாதாந்திரப் பராமரிப்பு

இந்நிலையில் தமிழ்நாடு மின்சார வாரியத்துறையின் கீழ் செயல்படும் துணை மின்நிலையங்களில் மாதாந்திரப் பராமரிப்பு காரணமாக மின் விநியோகம் நிறுத்தப்படுவது வழக்கமான ஒன்றாகும். இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி மாதத்தின் முதல் நாளே அதாவது நவம்பர் 1ம் தேதியான நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற அறிவிப்பை மின்வாரியம் வெளியிட்டுள்ளது.

36
கோவை

வெரைட்டி ஹால் ரோடு, டவுன்ஹால், ஒப்பணகார தெரு பகுதி, டி.கே.மார்க்கெட் பகுதி, செல்வபுரம், கெம்பட்டி காலனி பகுதி, கரும்புக்கடை, ஆத்துபாளையம் பகுதி, உக்கடம் பகுதி, ,சுங்கம், கலெக்டர், அரசு மருத்துவமனை, ரயில்வே ஸ்டேஷன் மற்றும் சுற்றியுள்ள பகுதிகள் அடங்கும்.

46
பெரம்பலூர்

உதயநத்தம், பிள்ளைபாளையம், ஜி.கே.புரம், ஆயுதக்களம், அரங்கோட்டை வாட்டர் ஒர்க்ஸ், டி.பாலூர் வாட்டர் ஒர்க்ஸ், சோலமாதேவி, ஸ்ரீபுரந்தன், கே.வி.குறிச்சி, உட்கோதைவாரியங்காவல், துளரங்குறிச்சி பகுதிகள் அடங்கும்.

56
திருச்சி

அரியமங்கலம், காட்டூர், சங்கிலியாண்டபுரம், கல்கந்தர் கோட்டை, மலையப்பா என்ஜிஆர், வள்ளுவர் என்ஜிஆர், மிலிட்ரி கிளை, முத்துமணிடவுன் 1-12 கிராஸ், மேலூர், நெடுந்தெரு, சாலை RD, நெல்சன் RD, புலிமண்டபம், ரெங்கா NGR, ராகவேந்திரபுரம், மங்கம்மா NGR, ராயர் தோப்பு, கீதா NGR, தாத்தாச்சாரியார் கார்டன், அபிஷ்கபுரம், கிருஷ்ணாபுரம், பரமசிவபுரம், டிவி நகர், ஆங்கரை, சிறுத்தையூர் மற்றும் சுற்றியுள்ள அனைத்து பகுதிகளும் அடங்கும்.

66
வேலூர்

கண்ணமங்கலம், வரகூர்புதூர், அம்மாபாளையம், வல்லம், கிளரசம்பேட்டை, அரக்கோணம் டவுன், காந்திநகர், அசோக்நகர், பஜார் தெரு, ஸ்டூவர்ட்பேட்டை, வீட்டு வசதி வாரியம், கடவாரி கண்டிகை, அம்பேத்கர் நகர், நேருஜி நகர், அடுக்கம்பாறை, துத்திப்பேட்டை, குளவிமேடு, நெல்வாய், கணியம்பாடி, பெரியபாளையம், சின்னப்பாளையம், சோழவரம், சாத்துமதுரை, வளர்புரம், அரக்கோணம், திருவாலங்காடு, மோசூர், விண்டர்பேட், எஸ்.ஆர். கேட், பெருமூச்சி, வெங்கடேசபுரம், அம்மனூர், தேவதகம், கடற்படை, ரயில்வே, ராம்கோ, பொய்ப்பாக்கம், அரக்கோணம் விண்டர்பேட்டை உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் மாலை 5 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மாலை 5 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories