எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதியில் மின்தடை?

Published : Apr 23, 2025, 07:34 AM ISTUpdated : Apr 23, 2025, 07:37 AM IST

துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற விவரத்தை மின்சாரம் வாரியம் வெளியிட்டுள்ளது.

PREV
14
எந்த வேலை இருந்தாலும் சீக்கிரமாக முடிச்சுடுங்க! தமிழகம் முழுவதும் இன்று எந்தெந்த பகுதியில் மின்தடை?
Maintenance Work

 Tamil Nadu Power Cut: தமிழகம் முழுவதும் தமிழ்நாடு மின்சார துறை சார்பில் மின்சாரம் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் மாதம் தோறும் துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். 

24
Tamilnadu power Cut

தமிழ்நாடு மின்சார வாரியம்

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி இன்று தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை ஏற்படப்போகிறது என்ற அறிவிப்பை மின்சார வாரியம் வௌியிட்டுள்ளது. 

34
Dindigul power shutdown

திண்டுக்கல் மாவட்டம்

அதாவது திண்டுக்கல்லை அடுத்த செங்குறிச்சி துணை மின்நிலையத்தில் புதிய மின்மாற்றிகள் அமைக்கும் பணி இன்று நடைபெறுகிறது. இதன் காரணமாக  செங்குறிச்சி மற்றும் செந்துறை துணை மின்நிலையங்களுக்கு உட்பட்ட ராஜக்காப்பட்டி, சிலுவத்தூர், புகையிலைப்பட்டி, வி.எஸ்.கோட்டை, மார்க்கம்பட்டி, வி.டி.பட்டி, வி.மேட்டுப்பட்டி,  தேத்தாம்பட்டி, கம்பிளியம்பட்டி, காட்டுப்பட்டி, செங்குறிச்சி. மேலும் எஸ்.குரும்பபட்டி, செந்துறை, மாதவநாயக்கன்பட்டி, பிள்ளையார்நத்தம், கோட்டைப்பட்டி, கோசுக்குறிச்சி, குடகிபட்டி, மங்களபட்டி, மணக்காட்டூர், களத்துப்பட்டி, மாமரத்துப்பட்டி, கருத்தநாயக்கன்பட்டி மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் மின்தடை ஏற்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது  காலை 8.30 மணி முதல் மாலை 5 மணி வரை மின்சாரம் நிறுத்தப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: விடுமுறை தொடர்பாக மாஸ் அறிவிப்பை வெளியிட்ட மாவட்ட ஆட்சியர்! குஷியில் அரசு ஊழியர்கள்!

44
Salem power shutdown

சேலம் மாவட்டம்

எருமாபாளையம், தாதுபாய்குட்டை பகுதி துணை மின்நிலையம் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதன் காரணமாக காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை. எருமாபாளையம், எருமாபாளையம் பை-பாஸ் ரோடு, சன்னியாசிகுண்டு, பாத்திமா நகர், பத்திரம் பெருமாள் கார்டன், சிவன்கரடு, சாமுண்டி நகர், கோவிந்தசாமி நகர், ஆறுமுக நகர், தாதுபாய் குட்டை, முருக்கவுண்டர்காடு, சிசி ரோடு, புலிக்குத்தி மெயின்ரோடு, புலிக்குத்தி 5, 6, சிவனார் தெரு, அசோக் நகர், சங்கர் பிலிம்ஸ் ரோடு, செங்கல்பட்டி தெரு, சிங்காரப்பேட்டை, மாவுமில் ரோடு, பஞ்சந்தாங்கி ஏரி, சாந்தி மருத்துவமனை ரோடு, நெய்மண்டி அருணாசலம் தெரு, கறிமார்க்கெட், லைன்ரோடு, மாரியம்மன் கோயில் தெரு, மேற்கு தெரு, ராமகிருஷ்ணா ரோடு, ஆண்டிப்பட்டி ஏரி குடியிருப்பு, அல்லிக்குட்டை காலனி, பிரபாத் பின்புறம், அம்பேத்கர் தெரு, நலாய் தெரு மற்றும் சுற்றுப்புற பகுதிகளில் காலை 9 மணி முதல் மதியம் 2 மணி வரை மின்தடை செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories