அக்டோபர் 31ம் தேதியான நாளை தமிழகம் முழுவதும் எந்தெந்த பகுதிகளில் மின்தடை! எத்தனை மணிநேரம்?

Published : Oct 30, 2025, 03:58 PM IST

தமிழகத்தில் துணை மின் நிலையங்களில் மாதாந்திர பராமரிப்பு பணிகள் காரணமாக மின்தடை அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, அக்டோபர் 31ம் தேதி நாளை சென்னை புளியந்தோப்பு மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் மின்விநியோகம் நிறுத்தப்படும்.

PREV
14
துணை மின் நிலையங்களில் பராமரிப்பு பணி

தமிழகத்தில் மாதந்தோறும் ஒவ்வொரு துணை மின் நிலையத்திலும் பராமரிப்பு பணி காரணமாக ஒருநாள் மின் நிறுத்தம் செய்யப்படுவது வழக்கம். மின் தடை செய்யப்படும் நேரத்தில் சிறு சிறு பழுதுகள் சரி செய்வது, மின் வயர் செல்லும் பாதையில் மரக்கிளைகளை அப்புறப்படுத்துவது உள்ளிட்ட பல்வேறு பராமரிப்பு பணிகளில் மின்சார வாரிய ஊழியர்கள் ஈடுபடுவது வழக்கம்.

24
மின்தடை

இதுகுறித்து பொது மக்களுக்கு ஏற்படும் சிரமங்களை தவிர்க்க முன்கூட்டியே மின்தடை ஏற்படும் இடங்கள் அறிவிக்கப்படும். அதன்படி நாளை தினம் அதாவது அக்டோபர் மாதத்தின் கடைசி நாளான 31ம் தேதி எந்தெந்த பகுதிகளில் மின்தடை மற்றும் எத்தனை மணிநேரம் என்பதை பார்ப்போம்.

34
புளியந்தோப்பு

சைடன்ஹாம்ஸ் ரோடு, கண்ணப்பர் திடல், ரிப்பன் பில்டிங், பெரியமேடு, சுந்தராபுரம், நேரு டிம்பர் மார்ட், அப்பா ராவ் கார்டன், டிமெல்லோஸ் ரோடு, வஉசி நகர், அம்பேத்கர் நகர், அம்மையம்மாள் தெரு, குட்டிதம்புரான் தெரு, கன்னிகாபுரம், காந்தி நகர், பவுடர் மில்ஸ் தெரு, சத்தியவாணி முத்து நகர், வீராசாம தெரு, பார்த்தசாரதி தெரு, நாச்சியாரம்மாள் சந்து, திரு.வி.க. நகர், பதீசன் புரம், அம்பேத்கர் நகர், மன்னார்சாமி தெரு, ராமசாமி தெரு, திருவேங்கடசாமி தெரு, புளியந்தோப்பு ஹை ரோடு, ஜாபர்கான் தெரு உள்ளிட்ட பகுதிகள் அடங்கும்.

44
சென்னை புளியந்தோப்பு

மேலும் போல்நாயக்கன் தெரு, நாச்சரம்மாள் தெரு, மன்னார்சாமி தெரு, நாராயணசாமி தெரு, டிகாஸ்டர் தெரு, சூளை மோதிலால் அண்ணல் தெரு, காட்டூர் நல்ல முத்து தெரு, அங்காளம்மன் கோவில் தெரு, அஸ்தபுஜம் சாலை, சூளை பெரியார் நகர், பார்த்தசாரதி தெரு, முனுசாமி நகர், ஆவடி ஸ்ரீனிவாசன் தெரு, கே.எம்.கார்டன், சுப்பநாயுடு தெரு, ஜி.வி.கோயில் தெரு உள்ளிட்ட பகுதிகளில் நாளை காலை 9 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின்விநியோகம் நிறுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மதியம் 2 மணிக்குள் பராமரிப்பு பணி முடிவடைந்தவுடன் மின்விநியோகம் கொடுக்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories