தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்பு முடிவுகள் வெளியானது.. மீண்டும் முதல்வராகிறார் ஸ்டாலின்.. தவெக? அதிமுக? நிலை என்ன?

Published : Apr 29, 2026, 06:39 PM ISTUpdated : Apr 29, 2026, 06:52 PM IST

தமிழக வரலாற்றி இதுவரை இல்லாத வகையில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 5.73 கோடி மொத்த வாக்காளர்களில் 85 சதவீதம் அதாவது 4.82 கோடி வாக்களித்துள்ளனர். இந்நிலையில் தேர்தலிக்கு பிந்தைய கருத்து கணிப்புகள் வெளியாகியுள்ளது. 

PREV
14
சட்டப்பேரவை தேர்தல்

தமிழகம் உள்ளிட்ட 5 மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் தேதியை தேர்தல் ஆணையம் அறிவித்தது. அதன்படி புதுச்சேரி, கேரளம் மற்றும் அசாம் உள்ளிட்ட 3 மாநிலங்களில் சட்டமன்றத் தேர்தல்கள் கடந்த 9ம் தேதி ஒரே கட்டமாக நடைபெற்று முடிந்தன. இதனைத் தொடர்ந்து தமிழ்நாட்டில் சட்டமன்றத் தேர்தல் கடந்த 23ம் தேதி மொத்தம் உள்ள 234 சட்டமன்ற தொகுதிகளுக்கான தேர்தல் ஒரே கட்டமாக வாக்குப்பதிவுடன் நிறைவடைந்தது. அதேபோல், மேற்கு வங்கத்தில் மொத்தம் 294 தொகுதிகளுக்கு இரண்டு கட்டங்களாக தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்தது.

24
மே 4 வாக்கு எண்ணிக்கை

அதன்படி, 152 தொகுதிகளுக்கு முதற்கட்ட வாக்குப்பதிவு 23ம் தேதி நடந்தது முடிந்தது. மீதமுள்ள 142 சட்டமன்ற தொகுதிகளுகான 2 -ம் மற்றும் இறுதி கட்ட வாக்குப்பதிவு இன்று நடைபெற்றது. இந்த 5 மாநிலங்களில் பதிவான வாக்குகள் மே 4ம் தேதி எண்ணப்பட்டு முடிவுகள் வெளியாக உள்ளன.

34
திமுக, அதிமுக, தவெக இடையே போட்டி

இதனிடையே தமிழக வரலாற்றி இதுவரை இல்லாத வகையில் ஓட்டு சதவீதம் அதிகரித்துள்ளது. அதாவது 5.73 கோடி மொத்த வாக்காளர்களில் 85 சதவீதம் அதாவது 4.82 கோடி வாக்களித்துள்ளனர். கடந்த 2021ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் வாக்களித்த 4.62 கோடி பேருடன் ஒப்பிடும்போது இந்த தேர்தலில் 20 லட்சம் பேர் அதாவது 5 சதவீதம் பேர் அதிகமாக வாக்களித்துள்ளனர். இது யாருக்கு சாதகமாக இருக்கும் என்பது தொடர்பாக திமுக, அதிமுக, தவெக உள்ளிட்ட அரசியல் கட்சிகளின் தலைவர்கள் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில் மேற்கு வங்கத்தில் இரண்டாம் கட்ட தேர்தல் முடிவடைந்த நிலையில் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்புகள் வெளியாகியுள்ளது.

44
கருத்து கணிப்பு முடிவுகள்

சாணக்யா ஸ்ட்ராட்டஜிஸ்

திமுக கூட்டணி 145 முதல் 160 தொகுதிகளிலும், அதிமுக கூட்டணி 50 முதல் 65 தொகுதிகளிலும் வெற்றி பெறும். தமிழக அரசியலில் எதிர்பார்க்கப்பட்ட தவெக 13 முதல் 18 தொகுதி வெற்றி பெறும். பிற 5 முதல் 8 தொகுதிகள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

என்டிடிவி பீப்பிள்ஸ் பல்ஸ்

திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களிலும், அதிமுக கூட்டணி 65 முதல் 80 இடங்களிலும், தவெக 18 முதல் 24 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற 2 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும்.

மேட்ரிஸ்

திமுக கூட்டணி 122 முதல் 132 இடங்களிலும், அதிமுக கூட்டணி 87 முதல் 110 இடங்களிலும், தவெக 10 முதல் 12 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற 0 முதல் 6 இடங்களில் வெற்றி பெறும். பெருவாரியான கருத்து கணிப்புகள் மீண்டும்திமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. 

ரிபப்ளிக் பி மார்க்

திமுக கூட்டணி 125 முதல் 145 இடங்களிலும், அதிமுக கூட்டணி 65 முதல் 85 இடங்களிலும், தவெக 10 முதல் 12 இடங்களில் வெற்றி பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. பிற 16 முதல் 26 இடங்களில் வெற்றி பெறும். பெருவாரியான கருத்து கணிப்புகள் மீண்டும் திமுக ஆட்சி அமைக்கும் என தெரிவித்துள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories