Pongal Festivel
தமிழர் திருநாளான பொங்கல் பண்டிகை ஜனவரி 14 தை பொங்கல், ஜனவரி 15 திருவள்ளுவர் தினம், ஜனவரி 16 உழவர் திருநாள் கொண்டாடப்படுகிறது. இந்நிலையில் அரசு ஊழியர்களுக்கு பொங்கல் போனஸ் தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிட்டுள்ளார்.
Government Employee
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் செயல்படுத்தி வரும் நாட்டிற்கே வழிகாட்டக்கூடிய பல முன்னோடி நலத்திட்டங்களை கடைக்கோடித் தமிழருக்கும் கொண்டு சேர்த்திட அபராது உழைத்திடும் அரசு ஊழியர்கள். ஆசிரியர்கள். ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்களுக்கு தமிழர் திருநாளாம் பொங்கல் பண்டிகையை முன்னிட்டு. 2023-2024-ஆம் ஆண்டிற்கான மிகை ஊதியம் மற்றும் பொங்கல் பரிசு வழங்கிட 163 கோடியே 81 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்து உத்தரவிட்டுள்ளார்கள்.
இதையும் படிங்க: இனி மழைக்கு குட்பாய்! ஆனால் இரண்டு நாட்களுக்கு! வானிலை மையம் சொன்ன முக்கிய தகவல்!
Pongal Bonus
* 'சி' மற்றும் 'டி' பிரிவைச் (C & D Group) சார்ந்த பணியாளர்கள் மற்றும் ஆசிரியர்களுக்கு ரூபாய் 3,000 என்ற உச்சவரம்பிற்குட்பட்டு மிகை ஊதியம் வழங்கப்படும்.
TN Government Employee
* "சி" மற்றும் "பிடி" பிரிவைச் சார்ந்த ஓய்வூதியதாரர்கள் மற்றும் குடும்ப ஓய்வூதியதாரர்கள், முன்னாள் கிராம பணியமைப்பு (முன்னாள் கிராம அலுவலர்கள். கிராம உதவியாளர்கள்) மற்றும் அனைத்து வகை தனி ஓய்வூதியதாரர்கள் ஆகியோருக்கும் ரூபாய் 500 பொங்கல் பரிசாக வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.