மதுரை ஆதீனம் சென்னை செல்லும் வழியில் உளுந்தூர்பேட்டையில் தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக குற்றம் சாட்டினார். விபத்துக்குள்ளான காரில் இஸ்லாமியர்கள் இருந்ததாகவும், பாகிஸ்தான் சதி செய்ததாகவும் கூறினார். ஆனால் போலீஸ் விசாரணையில், ஆதீனத்தின் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே விபத்துக்குக் காரணம் எனத் தெரியவந்துள்ளது.
மதுரை ஆதீனமாக 293-ஆவது பீடாதிபதியான ஸ்ரீலஸ்ரீ ஹரிஹர ஸ்ரீ ஞான சம்பந்ததேசிக பரமாச்சார்ய சுவாமிகள் உள்ளார். இவர் செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்குளத்தூர் எஸ்.ஆர்.எம். பல்கலைக்கழகத்தில் 6ஆவது அனைத்துலக சைவ சித்தாந்த மாநாட்டில் கலந்து கொள்வதற்காக நேற்று முன்தினம் மதுரையில் இருந்து சென்னை வந்தார்.
அப்போது அந்த நிகழ்வில் பேசிய மதுரை ஆதினம், உளுந்தூர்பேட்டை அருகே என்னை கொலை செய்ய சதி செய்து விட்டதாக பாஜக மூத்த தலைவர் நட்டா முன் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்தார். தன்னை கொலை செய்ய சதி நடந்ததாக குற்றம்சாட்டினார்.
24
இடித்த காரில் இஸ்ஸாமியர்கள் - மதுரை ஆதினம்
மதுரை மீனாட்சி சுந்தரேஸ்வரப் பெருமாள் தன்னை அந்த நேரத்தில் என்னை காப்பாற்றியதாக கூறினார். இது மட்டுமில்லாமல் தான வந்த காரை இடித்த காரில் இஸ்ஸாமியர் வெள்ளை உடை அணிந்து இருவர் இருந்ததாக கூறினார். இதன் பின்னணியில் பாகிஸ்தான் இருப்பதாகவும் மதுரை ஆதீனம் குற்றம் சாட்டினார். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை நடத்திய சம்பவ இடத்தில் சிசிடிவி காட்சிகளை கைப்பற்றப்பட்டது.
இதுகுறித்து போலீஸார் கூறுகையில், "02.05.2025 தேதி காலை மதுரை ஆதினம்சென்னைக்கு -TN 64 U 4005 Fortuner என்ற பதிவெண் கொண்ட நான்கு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தார்.
34
மதுரை ஆதினம் கார் விபத்து- போலீசார் விளக்கம்
அந்த கார் அஜிஸ் நகர் மேம்பாலத்தில் செல்லவில்லை. அதற்கு பதிலாக அஜிஸ் நகர் பிரிவு சாலை வழியாக உளுந்தூர்பேட்டை மார்க்கத்தில் அதிவேகமாக சென்றது. அப்போது காலை 9.45 மணிக்கு சேலம்- சென்னை நோக்கி சென்ற மாருதி கார் ரவுன்டானா அருகே மெதுவாக கடந்தது. அப்போது மதுரை ஆதீனம் காரின் பக்கவாட்டில் அந்த கார் உரசியதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விபத்தில் இரு கார்களும் லேசான சேதமடைந்தன. இந்த சம்பவத்தில் இரு தரப்பினரும் வாக்குவாதம் செய்துவிட்டு அந்த இடத்தை விட்டு புறப்பட்டுவிட்டனர். முதற்கட்ட விசாரணையில் கொலை முயற்சிக்கான சதி எதுவும் இல்லையென தெரிவிக்கப்பட்டது.
மேலும் ஆதீனம் பயணம் செய்த கார் டிரைவரின் கவனக்குறைவாலேயே விபத்து நடந்துள்ளதாகவும் போலீசார் தெரிவித்தனர். மேலும் விபத்து தொடர்பான சிசிடிவி காட்சிகளும் வெளியிடப்பட்டது. அதில் வேகமான வரும் கார் மற்றொரு காரின் பின் பகுதியில் மோதியது தெரியவருகிறது. மேலும் இரண்டு கார்களும் நிறுத்தப்பட்டுள்ள காட்சியும் வெளியாகியிருந்தது.
இந்த நிலையில் மதுரை ஆதீனம் கார் ஓட்டுநர் செல்வம் மீது போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளனர். மதுரை ஆதீனம் கார் ஓட்டுநரின் கவனக்குறைவே முழுக்க முழுக்க விபத்துக்கு காரணம் எனவும் தெரியவந்துள்ளதாக கூறப்படுகிறது.