சென்னையில் தொழிலதிபரை ஓட்டலில் கட்டிப்போட்டு 23 கோடி வைர நகைகள் கொள்ளை.! வெளியான ஷாக் தகவல்

Published : May 05, 2025, 10:13 AM ISTUpdated : May 05, 2025, 10:28 AM IST

சென்னை விருகம்பாக்கத்தில் வசிக்கும் சந்திரசேகரிடம் 23 கோடி ரூபாய் மதிப்புள்ள வைர நகையை மர்ம நபர்கள் கொள்ளையடித்துச் சென்றனர். வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலில் வைத்து நகை விற்பனை செய்யும் போது இந்த சம்பவம் நடந்துள்ளது. தனிப்படை அமைக்கப்பட்டு விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

PREV
16
சென்னையில் தொழிலதிபரை ஓட்டலில் கட்டிப்போட்டு 23 கோடி வைர நகைகள் கொள்ளை.! வெளியான ஷாக் தகவல்
சென்னையில் வைர நகை கொள்ளை

சென்னை விருகம்பாக்கம் நடேசன் நகரில் உள்ள பார்வதி என்ற தனியார் அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருபவர் சந்திரசேகர் (70). இவர் பழைய பொருட்களை வாங்கி விற்பனை செய்யும் தொழில் செய்து வருகிறார்.  இந்நிலையில் சந்திரசேகரிடம் மதுரையை சேர்ந்த தொழிலதிபர் அதிபர் ஒருவர் வைர நகையை ஒன்றை கொடுத்து விற்று தருமாறு கூறியதாக தெரிகிறது..  

இதனால் சந்திரசேகர் அந்த வைர நகையை விற்பதற்காக இடைத்தரகர்களான வில்லிவாக்கம் பகுதியை சேர்ந்த  ராகுல்(30) மற்றும் மணலியை சேர்ந்த ஆரோக்கிய ராஜ்(45),  சைதாப்பேட்டையை சேர்ந்த சுமார்(45) ஆகியோரை அணுகியுள்ளார்.

26
வைர நகையை விற்க முயற்சி

இதனை அடுத்து இடைத்தரகர்கள் விருதுநகர் மாவட்டத்தை சேர்ந்த தொழிலதிபர் லண்டன் ராஜன் என்பவர் வைர நகையை வாங்கி கொள்ளவுள்ளதாகவும் அவர் உங்களை சந்திக்க வேண்டும் என சந்திரசேகரிடம் தெரிவித்துள்ளனர். இதற்கு சந்திரசேகர் சம்மதம் தெரிவித்ததையடுத்து இடைத்தரகர்களான ராகுல், ஆரோக்கியராஜ், சுபான் ஆகியோர் லண்டன்‌ ராஜனை அண்ணாநகரில் உள்ள சந்திரசேகரின் வீட்டிற்கு  அழைத்து சென்றுள்ளார்.

அங்கு சந்திரசேகர் 17 கேரட் வைர நகையை லண்டன் ராஜனிடம் காண்பித்த போது அதனை பரிசோதித்த ராஜன் வைர நகை உண்மையானது என்பதை தெரிந்து கொண்டு 23 கோடி ரூபாய்க்கு அதனை வாங்கி கொள்வதாக தெரிவித்துள்ளார்.. 
 

36
வைர நகையோடு ஓட்டலுக்கு சென்ற வியாபாரி

மே மாதம் 4ஆம் தேதி பணத்தை கொடுத்து விட்டு வைர நகையை வாங்கி செல்வதாக கூறி விட்டு சென்றுள்ளனர்.  இந்நிலையில் நேற்று மதியம் இடைத்தரகர் ஆரோக்கியராஜ்,  சந்திரசேகரை செல்போனில் தொடர்பு கொண்டு வடபழனியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் (கிரீன் பார்க்) லண்டன் ராஜன் தங்கி‌ இருப்பதாகவும்  வைரத்தை ஓட்டலுக்கு கொண்டு வந்து கொடுத்துவிட்டு பணத்தை பெற்றுக் கொள்ளுமாறு தெரிவித்துள்ளார்..

இதனை நம்பி சந்திரசேகர் தனது வளர்ப்பு மகள் ஜானகி, புதுக்கோட்டையை சேர்ந்த தனது நண்பர் சுப்பிரமணி (56), மற்றும் கோயம்பேட்டை சேர்ந்த தன் கார் ஓட்டுனர் ஆகாஷ்(27) ஆகியோருடன் வைரத்தை எடுத்துக்கொண்டு வடபழனியில் உள்ள நட்சத்திர ஓட்டலுக்கு சென்றுள்ளார்..  

46
பணத்திற்காக காத்திருந்த வியாபாரி

அங்கு தனது மகள் மற்றும் கார் ஓட்டுனரை வெளியே நிற்க வைத்து விட்டு சந்திரசேகர் தனது நண்பர் சுப்பிரமணியை அழைத்து கொண்டு வைரத்துடன் லண்டன் ராஜன் தங்கி இருந்த அறைக்கு சென்றதாக தெரிகிறது. நீண்ட நேரம் ஆகியும் சுப்பிரமணியும் வரவில்லை.

சந்திரசேகரும் தொடர்பு கொள்ளாததால் சந்தேகமடைந்த மகள் ஜானகி உடனே ஓட்டலில் உள்ள அறைக்கு (636) சென்று பார்த்த போது தந்தை சந்திரசேகரை கட்டி போட்டு விட்டு அந்த கும்பல் வைரத்தை திருடி சென்றது தெரியவந்தது

56
கட்டிப்போட்டு வைர நகை கொள்ளை

இதனால் அதிர்ச்சி அடைந்த ஜானகி உடனே இது குறித்து வடபழனி காவல் நிலையத்தில் புகார் அளித்ததன் பேரில் போலீஸார் வழக்கு பதிவு செய்து சம்பவயிடத்தில் பதிவான சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி விசாரணை மேற்கொண்டு வந்தனர்.‌  மேலும் 23 கோடி‌ ரூபாய் மதிப்புள்ள வைர நகையை திருடி சென்ற கும்பலை தனிப்படை அமைத்து தீவிரமாக தேடிவந்தனர்.. 

 

66
லண்டன் ராஜா உள்ளிட்ட 4 பேர் கைது

இதற்கிடையே வைர நகையை திருடி சென்ற கும்பல் தூத்துக்குடியில் இருப்பது தெரிய வந்ததை அடுத்து தனிப்படை போலீசார் அங்கு விரைந்து சென்று வைர நகை திருடி சென்ற லண்டன் ராஜன், அவரது நண்பர் விஜய், உதவியாளர் அருணாசலம், மற்றும் பாஸ்கர் உள்ளிட 4 பேரை கைது செய்து அவர்களிடம் இருந்த வைர நகையை பறிமுதல் செய்தனர். மேலும் கைது செய்யப்பட்ட நான்கு பேரை சென்னை அழைத்து வரும் பணிகளை போலீஸார் மேற்கொண்டு வருகின்றனர். 

Read more Photos on
click me!

Recommended Stories