மாமல்லபுரத்தில் இன்று நடைபெறும் வன்னியர் இளைஞர் பெருவிழாவிற்காக பலத்த பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. கடந்த கால நிகழ்வுகளின் அடிப்படையில், போலீசார் பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்துள்ளனர்.
பாமக மற்றும் வன்னியர் சங்கம் சார்பில் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு மாமல்லபுரத்தை அடுத்த கிழக்கு கடற்கரை சாலையில் உள்ள திருவிடந்தை பகுதியில் இன்று மாலை 6 மணிக்கு மேல் நடைபெறவுவுள்ளது. இந்த மாநாட்டில் கலந்து கொள்ள தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் பல லடசம் பேர் வரவுள்ளனர்.
இதன் காரணமாக எந்தவித பிரச்சனையும் ஏற்படக்கூடாது என பாதுகாப்பு அதிகரிக்கப்பட்டுள்ளது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு மாமல்லபுரத்தில் நடைபெற்ற மாநாட்டில் வன்முறை ஏற்பட்டது. நினைவு சின்னங்கள் மீது ஏறியும், நள்ளிரவை கடந்து மாநாட்டை நடத்தியும், விடுதலை சிறுத்தைகளின் கட்சி கொடியை வெட்டியும் பதற்றமான நிலை நீடித்தது.
25
சித்திரை முழு நிலவு வன்னியர் இளைஞர் பெருவிழா
இதனையடுத்து பாமகவிற்கு எதிராக சட்டசபையில் ஜெயலலிதா எச்சரித்தார். இந்த கட்சியை தடை செய்ய வேண்டும் என பேசினார். மேலும் ராமதாஸ் மீது வழக்கும் பதியப்பட்டது. இந்த நிலையில் இன்று மீண்டும் சித்திரை முழு நிலவு, வன்னியர் இளைஞர் பெருவிழா மாநாடு நடைபெறவுள்ளது.
மாநாடு நடைபெற உள்ள நிலையில் நள்ளிரவில் அன்புமணி ராமதாஸ் மாநாடு ஏற்பாடுகள் தொடர்பாக ஆய்வு மேற்கொண்டிருந்தார். அப்போது அவரது வலது கையில், வன்னியர் சங்கத்தின் அடையாளமான வன்னியர் TATTOO இடம்பெற்றிருந்தது குறிப்பிடத்தக்கது.இரவு நேரத்தில் நிலவு வெளிச்சத்தில் ஜொலி ஜொலிக்கும் மாநாட்டு திடலை பார்வையிட்டனர்.
35
போலீசார் 10 கட்டுப்பாடுகள்
இதனிடையே பாமகவினருக்கு போலீசார் 10 முக்கிய உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
காவல்துறை விதித்த கட்டுப்பாடுகள் :
1. சித்திரை முழுநிலவு பெருவிழாவிற்கு வருபவர்கள் VEHICLE PASS பெற்றே மாநாட்டிற்கு வரவேண்டும். VEHICLE PASS இல்லாத வாகனங்கள் செங்கல்பட்டு மாவட்டத்திற்குள் அனுமதி இல்லை
2. மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் மாவட்ட காவல்துறையின் அறிவுறுத்தலுக்கேற்ப அனுமதிக்கப்பட்ட வழித்தடங்களில் மட்டுமே செல்ல வேண்டும்.
3. கடலூர், விழுப்புரம், நாகப்பட்டினம் மற்றும் மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி உள்ளிட்ட இடங்களிலிருந்து மாநாட்டிற்கு வரும் வாகனங்கள் ECR வழியாக மாநாட்டிற்கு வர தடை விதிக்கப்பட்டுள்ளது. அவர்கள் GST சாலையை பயன்படுத்த வேண்டும்.
4. இருசக்கர வாகனங்களில் மாநாட்டிற்கு வருவது தடைசெய்யப்பட்டுள்ளது.
5. மாநாட்டிற்கு வருபவர்கள்மது அருந்திவிட்டு வாகனம் ஓட்டுவதோ பொது இடங்களில் மது அருந்துவதோ கூடாது.
6.வாகன நிறுத்துமிடங்களில் மட்டுமே வாகனத்தை நிறுத்தி இறங்க வேண்டும்.
7. கடல் நீரில் விபத்துக்களை தவிர்க்கவும் பங்கேற்பாளர்கள் மாநாட்டுத் திடலுக்கு அருகாமையிலுள்ள கடற்கரைக்கு செல்ல அனுமதி கிடையாது.
8.பொதுமக்கள் ECR சாலையில் பயணத்தை தவிர்த்திட அறிவுறுத்தப்படுகிறது.
55
மாமல்லபுரம் சுற்றுலாவை தவிர்த்திடுங்கள்
9. சுற்றுலாப் பயணிகள் மற்றும் பொதுமக்கள் மாமல்லபுரம் மற்றும் பிற சுற்றுலாத்தலங்களை தவிர்த்திட கேட்டுக்கொள்ளப்படுகிறது.
10.சித்திரை பவுர்ணமி கிரிவலம் காரணமாக திருவண்ணமலைக்கு பெருமளவில் வாகனம் போக்குவரத்து இருக்கும் என்பதால் சென்னையிலிருந்து மேற்கு மற்றும் தென் மாவட்டங்களுக்கு செல்லும் கனரக மற்றும் சரக்கு வாகனங்கள் ஸ்ரீபெரும்புதூர், வேலூர், திருப்பத்தூர். சேலம் வழித்தடத்தினையும் மறுமார்க்கத்தில் சேலம் திருப்பத்தூர், வேலூர் வழித்தடத்தினையும் பயன்படுததுமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.