பாமக எம்எல்ஏ மீது புகார்
வரதட்சனை கேட்டு கொடுமைப்படுத்துவதாக மேட்டூர் பாமக சட்டமன்ற உறுப்பினர் சதாசிவம் மீது போலீசில் புகார் அளிக்கப்பட்டுள்ளது. இந்த புகாரையடுத்து பாமக எம்எல்ஏ மற்றும் அவரது மனைவி, மகன் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பாக புகார் கொடுத்த மனோலியாவின் தந்தை முருகேஷன் கூறுகையில்,
சேலம் மாவட்டம் மேட்டூர் பகுதி பாட்டாளி மக்கள் கட்சியைச் சேர்ந்த சதாசிவத்தின் மகன் சங்கருக்கு கடந்த 2019ஆம் ஆண்டு சேலம் அருகே உள்ள சர்க்கார் கொல்லப்பட்டியைச் சேர்ந்த எனது மகள் மனோலியாவிற்கும் திருமணம் நடைபெற்றது. திருமணத்திற்கு 500 பவுன் நகை கேட்ட நிலையில் 200 சவரன் நகையை கொடுத்தோம். மேலும் 45 லட்சம் மதிப்புள்ள கார் எம்எல்ஏ வீட்டில் இருந்து கேட்டுள்ளனர். ஆனால் தன்னால் முடியாது என மறுத்ததாகவும், இதனையடுத்து தன்னால் முடிந்த 25 லட்சம் மதிப்புள்ள கார் மட்டும் வாங்கி கொடுத்ததாக தெரிவித்தார்.