நடிகர் பிரகாஷ்ராஜூக்கு இந்திய அரசால் கொடுத்த அடையாளங்களையும் பறிக்க வேண்டும்- காவல் ஆணையரிடம் பரபரப்பு புகார்

First Published | Aug 23, 2023, 8:48 AM IST

சந்திரயான் தொடர்பாகவும் இந்திய விஞ்ஞானிகள் குறித்தும் கார்ட்டூன் வெளியிட்ட  திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜின் இந்திய அடையாளங்கள் பறிக்க படவேண்டும் என நாடார் சங்க தலைவர் முத்துரமேசு  வலியுறுத்தினார்
 

prakash raj row

சர்ச்சையான பிரகாஷ் ராஜ் பதிவு

நிலவில் இன்று களம் இறங்கவுள்ள சந்திரயான் 3 விண்கலம் தொடர்பாக நடிகர் பிரகாஷ் ராஜ் கார்ட்டூன் ஒன்றை பதிவிட்டிருந்தார். அதில் "வாவ்.. நிலவிலிருந்து விக்ரம் லேண்டர் அனுப்பிய நிலவின் முதல் புகைப்படம் இது" என குறிப்பிட்டிருந்தார். அந்த படத்தில் ஒருவர் டீயை நீண்ட தூரத்திற்கு தனது கைகளை உயர்த்தி டீ ஆற்றுவது போல் படம் இடம்பெற்றிருந்தது. இந்த கார்ட்டூன் படத்திற்கு பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்திருந்தனர். நடிகர் பிரகாஷ் ராஜ் இது தொடர்பாக விளக்கம் அளித்திருந்தார். அதில், "நான் ட்விட்டர் பகுதியில் பதிவிட்டது ஒரு பழைய ஆம்ஸ்ட்ராங் காலத்து ஜோக், அதைக்கூட புரிந்துகொள்ள முடியவில்லையா?" என்று கேட்டுள்ளார். 

பிரகாஷ் ராஜ் மீது புகார்

இருந்த போதும் இந்த விளக்கத்தை ஏற்றுக்கொள்ளாதவர்கள் திரைப்பட நடிகர் பிரகாஷ்ராஜ் மீது புகார் அளித்துள்ளனர். தமிழ்நாடு நாடார் சங்க நிர்வாகிகள்  சென்னை பெருநகர காவல் ஆணையர் அலுவலகத்தில் தங்களது புகாரை பதிவு செய்தனர். இதனை தொடர்ந்து செய்தியாளர்களை சந்தித்த நாடார் சங்க தலைவர்  முத்துரமேசு, நடிகர் பிரகாஷ் ராஜ் வெளியிட்ட புகைப்படம் இந்திய மக்கள், விஞானிகள், இஸ்ரோ தலைவர் அனைவரையும் கிண்டல் செய்யும் விதமாக பதிவிட்டு இருப்பதாகவும், இவர் வெளியிட்ட புகைப்படம் நிலாவில் இஸ்ரோ தலைவர் டி ஆத்துவது போல இருப்பதாகவும், இது மிகவும் கண்டிக்கத்தக்க செயல் என்று தெரிவித்தார்.
 


 இந்திய அடையாளங்களை பறிக்க வேண்டும்

எனவே திரைப்பட நடிகரான பிரகாஷ்ராஜின் இந்திய அரசால் வழங்கபட்ட அனைத்து அடையாளங்களையும் இந்திய அரசு பறிக்க  வேண்டும் என அவர் கேட்டுக்கொண்டார். மேலும் பிரகாஷ் ராஜ்  இந்தியர் என்பதற்கு தகுதியற்றவர் என்றும் தெரிவித்தார். இந்த புகார் மீது உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என காவல்துறை உறுதி அளித்ததாகவும் முத்துரமேசு தெரிவித்தார். 

இதையும் படியுங்கள்

சந்திராயன் 3.. கமெண்ட் அடித்து நெட்டிசன்களிடம் சிக்கிய நடிகர் பிரகாஷ் ராஜ் - தற்போது கொடுத்த விளக்கம் என்ன?

Latest Videos

click me!