இந்நிலையில், மனோலியா சூரமங்கலம் காவல் நிலையத்தில் பரபரப்பு புகார் ஒன்றை அளித்துள்ளார். அதில், கணவர் சங்கர், மாமனார் சதாசிவம், மாமியார், நாத்தனார் ஆகியோர் தன்னை வரதட்சணை கேட்டு கொடுமை படுத்துவதாக கூறியிருந்தார். இந்த புகாரின் பேரில் மேட்டூர் பாமக எம்எல்ஏ சதாசிவம், அவரது மகன் சங்கர் உள்ளிட்ட 4 பேர் மீது வரதட்சணை கொடுமை மற்றும் கொலை மிரட்டல் உள்ளிட்ட 6 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்துள்ளனர்.