அன்புமணி குறித்து எம்எல்ஏ அருள் இனியும் தவறாக பேசினால் அவ்வளவு தான்! கொதிக்கும் பாமக முன்னாள் எம்எல்ஏ!

Published : Jul 01, 2025, 12:30 PM IST

பாமக நிறுவனர் ராமதாஸ் மற்றும் அன்புமணி இடையேயான மோதல் கட்சி இரண்டாக உடையும் சூழலை ஏற்படுத்தியுள்ளது. அன்புமணி டெல்லி சென்று அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

PREV
15

பாமக நிறுவனர் ராமதாஸ் அன்புமணி இடையேயான மோதல் நாளுக்கு நாள் உச்சம் பெற்றுள்ளது. இருவரும் பாமகவுக்கு தாங்களே தலைவர் என்று கூறிவரும் நிலையில், கட்சி நிர்வாகிகள் அடுத்தடுத்து மாற்றப்படுவது அக்கட்சியினர் இடையே மிகப்பெரும் குழப்பத்தை ஏற்படுத்தி வருகிறது. இதனால் பாமக இரண்டாக உடையும் சூழல் நிலவி வருவதால் அக்கட்சி தொண்டர்களை கவலையில் ஆழ்த்தியுள்ளது. இந்நிலையில் திடீரென டெல்லி சென்றுள்ள அன்புமணி, அமித்ஷா மற்றும் தேர்தல் ஆணையத்தை அணுக திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

25

இந்நிலையில் ராமதாஸின் ஆதரவாளராக இருக்கும் சேலம் எம்எல்ஏவும், பாமக இணை பொதுச்செயலாளருமான அருள் செய்தியாளர்களுக்கு பேட்டியளிக்கையில்: ராமதாஸ் தான் எங்களுக்கு முதல் தலைவர். அடுத்த தலைவர் தான் அன்புமணி. இதில் எந்த மாற்றமும் கிடையாது. நாங்கள் எல்லாம் ராமதாஸை பார்த்து தான் அரசியலுக்கு வந்தோம். தலைவர் முதல் கிளை செயலாளர் வரை நிர்வாகிகளை நியமிக்கக்கூடிய அதிகாரம் படைத்தவர் ராமதாஸ் மட்டுமே. ஆனால் இன்றைக்கு பதவிக்காக பெற்ற அப்பாவை விட்டு சென்றிருக்கிறாரோ என எனக்கு பயமாக இருக்கிறது. எதிர்காலத்தில் அன்புமணி அவர்கள் தவறான உதாரணமாக மாறிவிடுவாரோ? என்று எனக்கு மிகவும் பயமாக இருக்கிறது. அப்பாவிற்கு மகன் கட்டுப்படவில்லை என்றால் அது தவறான முன்னுதாரணம் ஆகிவிடும். வாக்காளர்கள் அனைவரும் ராமதாஸ் பக்கம் உள்ளனர் என தெரிவித்திருந்தார்.

35

ராமதாசும் அன்புமணியும் இரண்டு கண்கள் என கூறும் அருள் அன்புமணிக்கு எதிராக ஏன் பேட்டி தர வேண்டும் என பாமக மாநில ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் எம்எல்ஏவுமான கார்த்தி கேள்வி எழுப்பியுள்ளார். இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: பாமகவின் உட்கட்சி விவகாரத்தில் எம்எல்ஏ அருள் உண்மைக்கு புறம்பான தகவல்களை தெரிவித்து வருகிறார். ராமதாசும் அன்புமணியும் இரண்டு கண்கள் என கூறும் அருள் அன்புமணிக்கு எதிராக ஏன் பேட்டி தர வேண்டும். அன்புமணி குறித்து பேச அருளுக்கு என்ன தகுதி உள்ளது. கட்சியின் நல்லது கருதி அன்புமணி குறித்து பொதுவெளியில் பேச வேண்டாம். 45 ஆண்டுகளாக ராமதாசுடன் உழைத்து விட்டு தற்போது நாங்கள் அமைதியாக இல்லையா?

45

பாமகவின் உட்கட்சி விவகாரம் சரியாகி விடகூடாது என்பதற்காக அருள் போன்றவர்கள் செயல்படுகிறார்கள். அருளின் செயல்பாட்டை வன்மையாக கண்டிக்கிறோம். ஐயாவை தவறாக பேசக்கூடாது என்று அன்புமணி உத்தரவிட்டுள்ளார். 25 க்கும் மேற்பட்ட முறை செய்தியாளர்களை சந்தித்த அன்புமணி ராமதாஸ் குறித்து தவறாக பேசியது கிடையாது. அன்புமணி குறித்து அருள் இனியும் தவறாக பேசினால் பொறுத்துக்கொள்ள முடியாது.

55

அன்புமணிக்கு அமைச்சர் பதவி கொடுத்ததும் ராமதாஸ்தான். அன்புமணியை முதல்வர் வேட்பாளர் என்று அறிவித்ததும் ராமதாஸ்தான். சிலரின் செயல்பாடு சந்தேகத்தை ஏற்படுத்துகிறது. தேர்தல் பணியில் அன்புமணியால் முடியாது என்றால் ராமதாஸால் முடியுமா? அருள் தன்னுடைய தகுதி அறிந்து பேச வேண்டும். யாருக்கு என்ன பொறுப்பு கொடுத்தோம் என்று கூட ராமதாசுக்கு நியாபகம் கிடையாது. யார் எழுதி கொடுத்து அவர் படிக்கிறார். பாமகவால் அருளுக்கு அச்சுறுத்தல் கிடையாது. பாமகவின் சட்டமன்ற உறுப்பினராக உள்ளவரை அருளை மதிப்போம். ராமதாஸை கருணைக்கொலை செய்யுங்கள் என்கிற வார்த்தை அருளின் வாயில் ஏன் வந்தது? அவர்களின் திட்டம்தான் என்ன? ராமதாசின் அருகே இருந்து கொண்டு சிலர் திட்டமிட்டு செயல்படுகிறார்கள். பாமகவின் தலைவராக அன்புமணி 3 ஆண்டுகள் இருந்தபோதும் கூட 3 மாதம் மட்டுமே நியமன கடிதங்களில் அவரின் கையெழுத்து இருந்தது. அதிகாரத்தை மீறி நிறுவனரின் கையெழுத்துதான் இடம் பெற்றது என்றார்.

Read more Photos on
click me!

Recommended Stories