10.5% கூட வேண்டாம் அய்யா..! கூலி வேலை செஞ்சுக்கறோம்... அப்பா மகனும் ஒன்னு சேர்ந்தா போதும்.. குமுறும் பாட்டாளி

Published : Nov 22, 2025, 10:03 PM IST

எங்களுக்கு இடஒதுக்கீடு கூட தேவையில்லை, கூலி வேலை செய்து கூட பிழைப்பு நடத்திக் கொள்கிறோம். ஆனால் அப்பாவும், மகனும் ஒன்று சேர்ந்தால் மட்டும் போதும் என பாமக தொண்டர் வெளியிட்ட சமூக வலைதளப் பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.

PREV
14
தந்தை, மகன் இடையேயான மோதல்

பாட்டாளி மக்கள் கட்சியில் தந்தை, மகன் இடையேயான மோதல் அக்கட்சி தொண்டர்களை மிகவும் சோர்வடையச் செய்துள்ளது. கட்சியின் நிறுவனரான நான் தான் தலைவர் என ராமதாஸ்ம், நான் தான் தலைவர் என அன்புமணியும் மாறி மாறி பதிவிக்கு உரிமை கொண்டாடி வருகின்றனர். மேலும் தங்கள் அதிகாரத்தை நிலை நாட்டுவதற்காக போட்டிப் போட்டு எதிர் தரப்பைச் சேருந்த நிர்வாகிகளை நீக்கி வருகின்றனர்.

24
தேர்தல் ஆணையத்தில் முறையிட்ட இரு தரப்பு

கட்சியை கைப்பற்றும் எண்ணத்தில் இரு தரப்பும் தேர்தல் ஆணையத்திடம் சின்னம், கொடியை தங்கள் தரப்புக்கு ஒதுக்கக்கோரி முறையிட்டுள்ளன. இதனால் எந்த தரப்பு எந்த கூட்டணியில் இணையம், எந்த தரப்புக்கு ஆதரவு தெரிவிப்பது என்ற குழப்ப நிலையில் கட்சி தொண்டர்கள் தவித்து நிற்கின்றனர்.

34
சோர்வடையும் தொண்டர்கள்

ஒரு கட்டத்தில் மாற்றம் முன்னேற்றம் அன்புமணி என்ற வாசகத்தோடு அன்புமணியை முதல்வர் வேட்பாளராக முன்னிருத்தி தேர்தலை சந்தித்தது. ஆனால் தற்போது எந்த கூட்டணியில் எத்தனை இடம் கிடைக்கும் என்ற ஏக்கத்தோடு காத்திருக்கும் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது. இந்த சூழலில் தந்தை, மகன் இடையேயான பிளவு கட்சி தொண்டர்கள் மத்தியில் கூடுதல் மனசோர்வை ஏற்படுத்தி உள்ளது.

44
இடஒருக்கீடு வேண்டாம்.. நீங்க இணைந்தால் போதும்..

இந்நிலையில் ஜெயங்கொண்டம் ஜெயபால் என்ற பாமகவின் தொண்டர் ஒருவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில் வெளியிட்டுள்ளப் பதிவில், “10.5 இடப்பங்கீடு எங்களுக்கு வாங்கித் தரவில்லை என்றாலும் பரவாயில்லை ஐயா.. அன்னன்னைக்கி கூலி வேலைக்கு போய் எங்களுடைய வயிற்றை கழுவி கொள்கிறோம்... நீங்கள் இருவரும் ஒற்றுமையாக இருந்தாலே இந்த இனத்திற்கு பாதி பலம் அதுவே எங்களுக்கு ஒரு பாதுகாப்பாக அரனாக அமைந்து விடும்.. மருத்துவர் ராமதாஸ், அன்புமணி ராமதாஸ் இனிப்பாக சந்திப்பு நடைபெற்றது விரைவில் நல்ல செய்தி வரும்” என்று குறிப்பிட்டுள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories