நிரம்பும் செம்பரம்பாக்கம்.! கூடுதல் நீர் திறக்க போறாங்க- அலர்ட்டாகும் மக்கள்

Published : Oct 22, 2025, 07:42 AM IST

வடகிழக்கு பருவமழையால் சென்னை செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2000 கன அடியை தாண்டியுள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதால், முன்னெச்சரிக்கையாக திறக்கப்பட்ட 100 கன அடி உபரி நீரை அதிகரிக்க அதிகாரிகள் ஆலோசித்து வருகின்றனர்.

PREV
13

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை அதிரடியாக தொடர்ந்துள்ளது. ஒரு சில மாவட்டங்களில் மட்டும் மழையை கொடுக்காமல் தமிழகம் முழுவதும் மழையானது பெய்து வருகிறது. அந்த வகையில் தென் மாவட்டம், டெல்டா மாவட்டம், வட மாவட்டங்களிலும் மழையானது கொட்டி வருகிறது. '

அந்த வகையில் சென்னை மற்றும் அதனை சுற்றியுள்ள மாவட்டங்களில் கடந்த சில இரு திடங்களாக மழையானது விட்டு விட்டு பெய்து வருகிறது. ஒரு சில இடங்களில் கன மழை பெய்துள்ளது. இதனால் பெரும்பாலான இடங்களில் மழை நீர் தேங்கியுள்ளது. மேலும் சென்னை மக்களின் குடிநீர் ஆதாரமாக உள்ள செம்பரம்பாக்கம் ஏரிக்கும் நீர் வரத்து அதிகரித்துள்ளது.

23

இதன் காரணமாக நேற்றைய தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்டது. இந்த நிலையில் நேற்று இரவும் தொடர்ந்து கன மழை பெய்து வருகிறது. இதனால் செம்பரம்பாக்கம் ஏரிக்கு நீர்வரத்து 2 ஆயிரம் கன அடியாக அதிகரித்துள்ளது. ஏரியின் நீர்மட்டம் 21 அடியை நெருங்குவதால் கூடுதல் உபரி நீர் திறக்க நீளவளத்துறை அதிகாரிகள் ஆலோசனை நடத்தி வருகிறார்கள்.

33

இன்று காலை நேர நிலவரப்படி செம்பரம்பாக்கம் ஏரியின் நீர்மட்டம் 20.84 அடி உயரமும், மொத்த கொள்ளளவு 2815 மில்லியன் கன அடியும், நீர்வரத்து 2170 கன அடியாக உள்ளது. நேற்றைய தினம் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக 100 கன அடி உபரி நீர் திறந்து விடப்பட்ட நிலையில் தற்போது நீர்வரத்து அதிகமாக இருப்பதாலும்

 நீர்மட்டம் 21 அடியை நெருங்கிக் கொண்டிருப்பதால் கூடுதலாக உபரி நீர் திறக்க அதிகாரிகள் ஆலோசனையில் ஈடுபட்டு வருகின்றனர். மழையானது நாளை வரை நீடிக்கவுள்ளதால் ஏரியில் இருந்து 1000 கன அடி நீர் முதல் கட்டமாக திறக்கப்படவாய்ப்பு இருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Read more Photos on
click me!

Recommended Stories