எத்தனை மறைமுகத் தடைகள் உருவாக்கப்பட்டாலும், நமக்காக நம் மக்கள் கூடும் திடல்கள் எப்போதும் கடல்களாகத்தான் மாறும் என்பதை உணர்ந்து, ஜன நெருக்கடி சிறிதும் இல்லாத வகையில் நிலம் தேர்வு செய்வதில் இருந்து மாநாடு முடியும் வரை தலைமை ஒருங்கிணைப்பாளராக இருந்து அனைத்துப் பணிகளையும் சிறப்புடன் மேற்கொண்ட கழகப் பொதுச் செயலாளர், அவருக்கு உறுதுணையாக இருந்து மாநாட்டு பணிகளை மேற்கொண்ட கூடுதல் பொதுச் செயலாளர்கள், பொருளாளர், துணைப் பொதுச்செயலாளர், தலைமை நிலையச் செயலாளர்கள், மாவட்டக் கழக அனைத்து நிர்வாகிகள், சார்பு அணிகளின் நிர்வாகிகள், மாநாட்டு ஒருங்கிணைப்பு குழு உள்ளிட்ட அனைத்து குழுவினர், நகர, ஒன்றிய, பேரூர், வார்டு கழகத்தின் அனைத்து நிலை நிர்வாகிகள் உள்ளிட்ட அனைருவக்கும் மனம் நிறைந்த பாராட்டையும், நன்றியையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
மாநாட்டில் பொதுமக்களின் பாதுகாப்பில் பணியாற்றிய தமிழ்நாடு காவல்துறை, அனைத்து அரசுத்துறைகளைச் சேர்ந்த அதிகாரிகள், தனியார் பாதுகாப்பு குழுவினர், அனைத்து ஊடக துறை நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் சிறப்பு நன்றி.