Palani: திருப்பதியை தொடர்ந்து பழனி பஞ்சாமிர்தத்திலும் மாட்டுக் கொழுப்பு? தமிழக அரசு வெளியிட்ட உண்மை!

First Published Sep 21, 2024, 6:57 AM IST

Palani Panchamirtham Animal Fat: திருப்பதி லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலந்ததாக எழுந்த சர்ச்சையைத் தொடர்ந்து, பழனி பஞ்சாமிர்தம் தயாரிப்பில் பயன்படுத்தப்படும் நெய் குறித்தும் சந்தேகங்கள் எழுந்துள்ளன. ஆனால், பழனி முருகன் கோவில் நிர்வாகம் இதனை மறுத்துள்ளது.

Tirupati laddu

உலக பிரசித்தி பெற்ற திருப்பதி ஏழுமலையான் கோவிலில் வழங்கப்படும் பிரசாத லட்டில் விலங்குகளின் கொழுப்பு கலப்பதாக அம்மாநில முதல்வர் சந்திரபாபு நாயுடு குற்றம்சாட்டியது தேசிய அளவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது மட்டுமல்லாமல் பக்தர்கள் மத்தியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. மேலும் ஜெகன் மோகன் ரெட்டி கடந்த 5 ஆண்டு கால ஆட்சியில் திருமலையின் புனிதத்தைக் கெடுத்துவிட்டார் எனவும் குற்றம்சாட்டியிருந்தார். 

YSR Congress

இந்த குற்றச்சாட்டை திட்டவட்டமாக மறுத்த ஒய்.எஸ்.ஆர் கட்சியின் மாநிலங்களவை உறுப்பினரும், திருப்பதி தேவஸ்தானத்தின் முன்னாள் தலைவருமான ஒய்.வி சுப்பா ரெட்டி அரசியல் ஆதாயத்திற்காக சந்திரபாபு நாயுடு எந்த அளவுக்கும் செல்வார் என்பதற்கு இதுவே ஒரு உதாரணமாகும். நானும் எனது குடும்பத்தினரும் திருமலை பிரசாதம் குறித்து ஏழுமலையான் முன் சத்தியம் செய்யத் தயாராக உள்ளோம். அதேபோல் சந்திரபாபு நாயுடுவின் குடும்பத்துடன் வந்து சத்தியம் செய்ய தயாரா? என கூறியிருந்தார்.

இதையும் படிங்க: Tirupati Laddu: "இந்துக்கள் என்றால் இளிச்சவாயர்களா"! அதுவும் திருப்பதி லட்டுல இப்படியா? இயக்குநர் மோகன்ஜி!

Latest Videos


Tirupati Laddu Animal Fat

இந்நிலையில் தெலுங்கு தேச கட்சியை சேர்ந்த நிர்வாகி லட்டு தயாரிக்க பயன்படுத்தபட்ட நெய்யை குஜராத்தில் உள்ள தேசிய கால்நடை ஆராய்ச்சி ஆய்வகத்துக்கு அனுப்பி ஆய்வு மேற்கொள்ளப்பட்டது. அதில், லட்டு தயாரிக்க பயன்படுத்தப்பட்ட நெய்யில் பன்றிக் மற்றும் மாட்டுக் கொழுப்பும், மீன் எண்ணெய், சோயா பீன், சூரிய காந்தி, பாமாயில் கலந்து இருப்பதும் உறுதியானது. 

Palani Panchamirtham

திருப்பதி லட்டு தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய்யானது திண்டுக்கல்லை சேர்ந்த ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் இருந்தும் பெறப்பட்டதாக திருப்பதி தேவஸ்தானம் குற்றம் சாட்டியிருந்தது.  இந்நிலையில், தமிழ்நாட்டில் புகழ்பெற்ற பழனி முருகன் கோவிலில் பிரசாதமாக வழங்கப்படும் பஞ்சாமிர்தம் தயாரிக்க  ஏ.ஆர் டெய்ரி நிறுவனத்திடம் நெய் வாங்கப்படுவதாக சமூக வலைதளத்தில் செய்திகள் வைரலானது. இதனால் பக்தர்கள் அதிர்ச்சியடைந்தனர். 

இதையும் படிங்க:  Tamilnadu Government: மாணவர்களுக்கு ரூ.1,00,000 கொடுக்கும் தமிழக அரசு! யாருக்கெல்லாம்? எதற்காக? இதோ முழு தகவல்

Tamilnadu Government

இதுதொடர்பாக  உண்மை சரிபார்ப்பு குழு தனது சமூக வலைதள பக்கத்தில் விளக்கமளித்துள்ளது. அதில், பழனி பஞ்சாமிர்தத்தில் விலங்கின் கொழுப்பு கலந்த நெய் பயன்படுத்துவதாக பகிரப்படும் செய்திகள் வதந்தி. பழனி பஞ்சாமிர்தம் தயாரிக்க பயன்படுத்தப்படும் நெய் ஆவின் நிறுவனத்திடம் இருந்தே பெறப்படுகிறது. திருப்பதி லட்டு சர்ச்சையில் சிக்கிய ஏ.ஆர்.டெய்ரி நிறுவனத்திடம் இருந்து நெய் கொள்முதல் செய்யப்படவில்லை. சமூக வலைதளங்களில் பரவி வரும் தகவலில் எந்த உண்மையும் இல்லை என அறநிலையத்துறை சார்பில் விளக்கமளிக்கப்பட்டுள்ளது. 

click me!