திமுக மீண்டும் ஆட்சிக்கு வரும்.. அடித்து சொன்ன ஓபிஎஸ்.. உதயசூரியனில் ஐக்கியமாகும் தேதி இதுவா?

Published : Feb 20, 2026, 03:38 PM IST

திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும் என்று ஓபிஎஸ் தெரிவித்துள்ளார். ஓபிஎஸ் திமுகவில் எப்போது இணைவார்? என்பது குறித்து இந்த செய்தியில் விரிவாக பார்க்கலாம்.

PREV
13
தனி மரமான ஓபிஎஸ்

அதிமுகவில் இருந்து நீக்கப்பட்ட ஓபிஎஸ் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக சட்டப்போராட்டம் நடத்தி வந்தார். ஆனால் அவருடன் இருந்த மூத்த தலைவர்கள் மனோஜ் பாண்டியன், வைத்திலிங்கம் ஆகியோர் திமுகவில் சேர்ந்ததால் ஓபிஎஸ் தனி மரம் ஆனார். இதனால் அதிர்ச்சி அடைந்த ஓபிஎஸ், அதிமுகவில் மீண்டும் சேர ஆர்வம் காட்டிய போதிலும் இபிஎஸ் அதற்கு மறுத்து விட்டார். இதனால் ஓபிஎஸ்ஸின் அடுத்த மூவ் என்ன? என்பதை பத்திரிகையாளர்கள் தொடர்ந்து கேட்டு வந்தனர்.

திமுக தான் மீண்டும் ஆட்சிக்கு வரும்

அதற்கு தை முடிவதற்குள் வழி பிறக்கும் என்று அவர் சொல்லி வந்தார். இந்த நிலையில், திமுக ஆட்சியின் கடைசி சட்டமன்ற கூட்டத் தொடர் இன்று நிறைவடைந்த நிலையில், சட்டப்பேரவை வளாகத்தில் ஓபிஎஸ் திமுக தலைவரும், முதல்வருமான மு.க.ஸ்டாலினை சந்தித்து பேசியது அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. முதல்வரை சந்தித்து விட்டு வெளியே வந்த ஓபிஎஸ், ''மீண்டும் திமுக தான் ஆட்சிக்கு வரும்'' என்று உறுதியாக கூறியுள்ளார்.

23
ஸ்டாலினை சந்தித்த ஓபிஎஸ்

இது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய ஓபிஎஸ், ''5 ஆண்டு கால திமுக ஆட்சி சிறப்பாக நிறைவுபெற்றதன் காரணமாக முதல்வரை சந்தித்து வாழ்த்துகள் தெரிவித்தேன்'' என்றார். முன்னதாக சட்டப்பேரைவையில் பேசிய ஓபிஎஸ் ஆதரவு எம்.எல்.ஏ ஐயப்பன், ''எம்.ஜி.ஆர், ஜெயலலிதா ஆசியுடன் முதல்வர் ஸ்டாலின் மீண்டும் மீண்டும் முதல்வராக பதவியேற்பார்'' என்று கூறியிருந்தார். இது குறித்து ஓபிஎஸ்ஸிடம் செய்தியாளர்கள் கேட்டனர்.

திமுக அரசு செய்த சாதனைகள்

இதற்கு பதிலளித்த அவர், ''தனது எண்ணம், செயல்பாட்டை, தமிழக மக்கள் என்ன நினைத்துக் கொண்டிருக்கிறார்கள் என்பதை அவர் (ஐயப்பன்) சொல்லியிருக்கிறார். இன்று இருக்கிற அரசியல் சூழ்நிலை. 5 ஆண்டு கால ஆட்சியின் நிலை, அவர்கள் இந்த நாட்டுக்கு செய்துள்ள சாதனைகள் இவையெல்லாம் மக்கள் மனதில் ஆழமாக பதிந்துள்ளது.

 மீண்டும் ஆட்சிக்கு வரக்கூடிய வாய்ப்பு திமுகவுக்கு இருக்கிறது. தமிழகத்துக்கே வழி பிறந்துள்ளது'' என்றார். தொடர்ந்து திமுகவில் இணைவீர்களா? என்று கேட்டதற்கு மறுப்பு ஏதும் சொல்லாத ஓபிஎஸ், பொறுமை காக்கும்படி கூறினார்.

33
1 வாரத்துக்குள் திமுகவில் இணையும் ஓபிஎஸ்

மீண்டும் ஸ்டாலின் தான் முதல்வர் என்று ஓபிஎஸ் சொல்லியிருப்பதன் மூலம் அவர் திமுகவில் இணைவது உறுதியாகியுள்ளது. அநேகமாக இன்னும் 1 வாரத்துக்குள் ஓபிஎஸ் திமுகவில் இணைவார் என தகவல்கள் கூறுகின்றன. ஓபிஎஸ் தமிழகத்தின் முதல்வராக இருந்தவர். அவர் இணைந்தால் திமுக என்ன பதவி கொடுக்கும்? என்பதை பொறுத்திருந்து பார்ப்போம்.

Read more Photos on
click me!

Recommended Stories