காங்கிரஸுக்கு மூக்கணாங்கயிறு..! ஸ்டாலினின் கடைசி கட்ட பிளான்!

Published : Feb 20, 2026, 03:33 PM IST

காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தெலுங்கானா முடல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரின் உதவியுடன் சோனியா காந்தியுடன் நேரடியாக பேசி இந்த விவகாரத்தை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார்.

PREV
14

தமிழக அரசியல் களம் இப்போது ஒரு மிகப்பெரிய போர்க்களமாக மாறி இருக்கிறது. குறிப்பாக திமுக- காங்கிரஸ் இடையிலான உறவு முன்னபோதும் இல்லாத வகையில் ஒரு கடுமையான விரிசலைசந்தித்து வருகிறது. இதற்கு மிக முக்கிய காரணமாக இருப்பவர் விருதுநகர் தொகுதி நாடாளுமன்ற உறுப்பினர் மாணிக்கம் தாகூர். அவர் வெளியிட்ட ஒரு கருத்து ஒட்டுமொத்த தமிழக அரசியலையும் திரும்பி பார்க்க வைத்திருக்கிறது.

தமிழக முதல்வர் ஸ்டாலின் இந்தியா கூட்டணியின் மிக முக்கியமான தூண் என்றும் அவர்தான் எதிர் கட்சியின் தலைவர்களிலேயே முதன்மையானவர் என்றும் புகழ்ந்து தள்ளி இருக்கிறார். இதன் ஒரு மிகப்பெரிய ஒரு அரசியல் கணக்கிருப்பதாக சொல்லப்படுகிறது. சில நாட்களுக்கு முன்பு வரை தமிழகத்தில் கூட்டணி ஆட்சி தான் சிறந்தது என்று பேசி வந்த மாணிக்கம் தாகூர் இப்போது ஏன் தனது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டுள்ளார்? அவர்களுக்கு ஆட்சி அதிகாரத்தில் பங்கு வேண்டும் என்ற கோரிக்கையில் இருந்து அவர் ஏன் பின் வாங்கினார்? என்ற சந்தேகமும் கிளம்பியுள்ளது. விவரம் அறிந்தவர்கள் இது குறித்து, ‘‘ஸ்டாலினை பாராட்டுவதன் மூலம் இது தற்காலிக அமைதிக்கான தந்திரம்’’ என்கிறார்கள்.

24

இதனை திமுக தலைவர்கள் நன்கு உணர்ந்துள்ளனர். திமுகவின் இரண்டாம் கட்ட தலைவர்கள் சிலர் காங்கிரஸ் போனால் போகட்டும் என்ற மனநிலையில் இருக்கிறார்கள். ஆனால் முதல்வர் ஸ்டாலின் இந்த விவகாரத்தில் மிகவும் எச்சரிக்கையாக இருக்கிறார். ராகுல் காந்தியின் முழு ஆதரவோடு தான் மாணிக்கம் பேசுகிறார் என்பது முதல்வருக்கு நன்றாக தெரியும். அதனால்தான் காங்கிரஸ் கூட்டணி உடைந்து விடக்கூடாது என மு.க.ஸ்டாலின் உறுதியாக இருக்கிறார். அதேசமயம் காங்கிரஸ் கட்சி கேட்கும் சில நிபந்தனைகளை ஏற்க கேட்பதை ஏற்க தயாராக இல்லை.

34

41 தொகுதிகள் கேட்பதையும், உள்ளாட்சி பதவிகளில் கணிசமான பங்கு மற்றும் அமைச்சரவையில் இடம் போன்ற கோரிக்கைகளை திமுக தரப்பு ரசிக்கவில்லை. இந்த சிக்கல்களை முறியடிக்க மு.க.ஸ்டாலின் முக்கியமான முடிவு எடுத்து இருக்கிறார். காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜூன கார்கே, தெலுங்கானா முடல்வர் ரேவந்த் ரெட்டி ஆகியோரின் உதவியுடன் சோனியா காந்தியுடன் நேரடியாக பேசி இந்த விவகாரத்தை முடிக்க அவர் திட்டமிட்டுள்ளார். திமுக மற்றும் காங்கிரஸ் இடையிலான உச்சகட்ட மோதலுக்கு இடையில்தான் கே.சி.வேணுகோபாலின் சென்னை வருகை அமைந்திருந்தது. அவர் சென்னை வரும்போது முதல்வரை சந்திக்க வைக்க பல தரப்பிலும் முயற்சிகள் எடுக்கப்பட்டது.

44

ஆனால் அந்த சந்திப்பை முறியடிக்க கட்சிகளுக்கு இடையே சில சதிகள் வேலைகள் செய்ததாகவும் சொல்லப்படுகிறது. இதற்கிடையே காங்கிரஸ் முன்னால் எம்.பி., மணிசங்கர் பேசிய பேச்சு எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்று போல் அமைந்தது. இந்தியா கூட்டணியை வழிநடத்த ஸ்டாலின் தான் சரியான நபர் என்று மணிசங்கர் ஐயர் கூறி இருந்தார். அதேசமயம் கே.சி.வேணுகோபாலை ஒரு ரவுடி என்று அவர் பேசியது பரபரப்பு ஏற்படுத்தியது. இது காங்கிரஸ் கட்சிக்குள் ஒரு குழப்பத்தை உண்டாக்கி விட்டது.

Read more Photos on
click me!

Recommended Stories