ஆபரேஷன் சிந்தூர் இது வெறும் தொடக்கம் தான்! ஒரே வரியில் அலறவிடும் ஆளுநர் ஆர்.என்.ரவி!

Published : May 07, 2025, 12:42 PM ISTUpdated : May 07, 2025, 12:44 PM IST

பஹல்காமில் பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இந்தியா வான்வழி தாக்குதல் நடத்தியது. இந்த தாக்குதலில் 8 பேர் உயிரிழந்தனர், 35 பேர் படுகாயமடைந்தனர்.

PREV
14
ஆபரேஷன் சிந்தூர் இது வெறும் தொடக்கம் தான்! ஒரே வரியில் அலறவிடும் ஆளுநர் ஆர்.என்.ரவி!
பஹல்காம் தாக்குதல்

ஜம்மு-காஷ்மீரின் பஹல்காமில் கடந்த மாதம் 22ம் தேதி பயங்கரவாதிகள் நடத்திய கண்மூடித்தனமான தாக்குதலை அரங்கேற்றினர். இந்த தாக்குதலில் சுற்றுலா பயணிகள் 26 பேர் உயிரிழந்தனர். இந்த தாக்குதலுக்கு பாகிஸ்தானை தலைமையிடமாக கொண்ட லஷ்கர்-இ-தொய்பா பயங்கரவாத அமைப்பின் கிளை அமைப்பான தி ரெசிஸ்டண்ட் பிரண்ட் பயங்கரவாத அமைப்பு பொறுப்பேற்றது. இந்த தாக்குதலுக்கு நிச்சயமாக பதிலடி கொடுக்கப்படும் என பிரதமர் மோடி மற்றும் உள்துறை அமைச்சர் அமித்ஷா ஆகியோர் கூறிவந்தனர். இதனால் இரு நாடகளுக்கும் இடையே போர் பதற்றம் ஏற்பட்டது. 

24
பாகிஸ்தான் மீது தாக்குதல்

இதனால் எந்த நேரத்திலும் இந்தியா பாகிஸ்தான் மீது தாக்குதல் நடத்தலாம் என கூறப்பட்டு வந்தது. இந்நிலையில், பஹல்காம் தாக்குதலுக்கு பதிலடியாக பாகிஸ்தான் மற்றும் பாகிஸ்தான் ஆக்கிரமிப்பு காஷ்மீரில் இன்று ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் இந்தியா வான்வழி தாக்குதலை நடத்தியது. நள்ளிரவு 1.44 மணியளவில் இந்தியாவில் இருந்து ஏவுகணைகள் பாகிஸ்தானில் செயல்பட்டு வரும் பயங்கரவாத முகாம்களை குறிவைத்து ஏவப்பட்டன. பாகிஸ்தானில் உள்ள 9 பயங்கரவாத முகாம்கள் மீது இந்த  தாக்குதல் நடத்தப்பட்டது. இந்தியா நடத்திய இந்த அதிரடி ஏவுகணை தாக்குதலில் பாகிஸ்தானில் 8 பேர் உயிரிழந்தனர். மேலும், 35 பேர் படுகாயமடைந்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

34
அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு

இந்த பதிலடிக்குப் பிறகு 'நீதி நிறைவேற்றப்பட்டது' என்று ராணுவம் தெரிவித்தது.  இந்நிலையில் பாகிஸ்தான் மீதான இந்தியாவின் தாக்குதலுக்கு தேசிய கட்சி தலைவர்கள் மற்றும் முதல்வர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி  உள்ளிட்ட அரசியல் கட்சி தலைவர்கள் பாராட்டு தெரிவித்து வருகின்றனர்.

44
தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி

இந்நிலையில் தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவியும் ஆபரேஷன் சிந்தூர் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். இதுதொடர்பாக அவர் வெளியிட்டுள்ள எக்ஸ் தளத்தில்: பாரத தாய் வாழ்க" ஆபரேஷன் சிந்தூர்  இது வெறும் தொடக்கம் தான் என பதிவிட்டுள்ளார். 

Read more Photos on
click me!

Recommended Stories