பொறியியல் விண்ணப்பங்கள் தொடங்கியது.! ரேண்டம் எண்.? தரவரிசைப்பட்டியல் எப்போது வெளியீடு.?

Published : May 07, 2025, 11:42 AM IST

தமிழ்நாட்டில் 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் மே 8, 2025 அன்று வெளியிடப்படும். பொறியியல் படிப்புகளுக்கான விண்ணப்பங்கள் மே 7 முதல் தொடங்கியுள்ளன. விண்ணப்பிக்க https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தைப் பார்வையிடவும்.

PREV
14
பொறியியல் விண்ணப்பங்கள் தொடங்கியது.! ரேண்டம் எண்.? தரவரிசைப்பட்டியல் எப்போது வெளியீடு.?
பொறியியல் படிப்பு- விண்ணப்பம் தொடங்கியது

தமிழ்நாட்டில் 12-ம் வகுப்பு பொதுத்தேர்வு முடிவுகள் நாளை ( 08.05.2025) காலை 9 மணிக்கு வெளியிடப்பட்ட உள்ளது. மொத்தமாக  8 லட்சத்து 21 ஆயிரத்து 57 பேர் எழுதியுள்ள தேர்வு முடிவுகளை தமிழக மாணவர்கள் ஆவலோடு எதிர்பார்த்து காத்துள்ளனர்.

அந்த வகையில் 12ஆம் வகுப்பு பள்ளி மாணவர்கள் தமிழ்நாடு பள்ளிக் கல்வித் துறையின் அதிகாரப்பூர்வ இணையதளமான tnresults.nic.in, dge1.tn.nic.in, dge2.tn.nic.in மற்றும் dge.tn.gov.in மூலம் பிறந்த தேதி மற்றும் பதிவு எண்ணை உள்ளிட்டு மாணவர்கள் TN HSC முடிவை 2025 சரிபார்த்துக்கொள்ளலாம். 

24
பொறியியல் கலந்தாய்வு

இந்த நிலையில் பொறியியல் படிப்பிற்கான விண்ணப்பங்கள் இன்று முதல் விநியோகம் தொடங்கியுள்ளது. இதனை உயர்கல்வித்துறை அமைச்சர் கோவி செழியன் தொடங்கி வைத்தார். தமிழ்நாட்டில் பொறியியல் படிப்புகளுக்கான சேர்க்கை தொழில்நுட்பக் கல்வி இயக்ககம் மூலம் ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்படுகிறது. அந்த வகையில், 2025-26 கல்வி ஆண்டிற்கான பொறியியல் கல்லூரி மாணவர்கள் சேர்க்கைக்கான கலந்தாய்விற்கு (TNEA 2025 Registration) இன்று (மே 7) முதல் விண்ணப்பிக்கலாம்.

34
ரேண்டம் எண் எப்போது வெளியீடு

பொறியியல் படிப்புகளில் சேர விரும்பும் மாணவர்கள் https://www.tneaonline.org/ என்ற இணையதளத்தில் ஆன்லைன் வழியாக இன்று (மே 7) முதல் விண்ணப்பிக்க தொடங்கலாம். அந்த வகையில் விண்ணப்பிக்கம் சமர்பிக்க ஜூன்  6ஆம் தேதியும், அசல் சான்றிதழ் சமர்பிக்க வேண்டிய கடைசி நாளாக ஜூன் 9ஆம் தேதி என அறிவிக்கப்பட்டுள்ளது.

ரேண்டம் எண் ஜூன் 11ஆம் தேதி வெளியிடப்படும் எனவும், சான்றிதழ்கள் இணையதளம் வாயிலாக ஜூன் 10ஆம் தேதி முதல் 20ஆம் வரை சரிபார்க்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

44
தரவரிசைப்பட்டியல் வெளியீடு

தரவரிசைப்பட்டியல் ஜூன் 27ஆம் தேதி வெளியிட இருப்பதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் ஏதேனும் குறைகள் இருந்தால் சரி செய்து கொள்ள ஜூன் 28ஆம் தேதி முதல் ஜூலை 2ஆம் தேதி வரை ஒதுக்கப்பட்டுள்ளதாக கூறப்பட்டுள்ளது.

இந்த பணிகள் அனைத்தும் முடிவடைந்த பிறகு பொறியில் கலந்தாய்வு எந்த தேதியில் நடைபெறும் என அறிவிக்கப்படும் என தொழில்நுட்ப இயக்ககம் தெரிவித்துள்ளது.  மேலும் 2025-26 கல்வி ஆண்டிற்கும் பொறியல் கலந்தாய்வு இணைய வழியில் https://www.tneaonline.org/ என்ற இணையதளம் வழியாக நடைபெற உள்ளது குறிப்பிடத்தக்கது.

Read more Photos on
click me!

Recommended Stories