சதம் அடித்த வெங்காயம்.. உயரும் தக்காளி விலை- கோயம்பேட்டில் காய்கறி விலை நிலவரம் என்ன

சமையலுக்கு முக்கிய தேவையான காய்கறிகள் கோயம்பேடு சந்தைக்கு  பல்வேறு மாவட்டங்கள் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்களில் இருந்தும் வருகிறது. அந்த வகையில் வரத்து குறைந்ததன் காரணமாக வெங்காயம், தக்காளி, இஞ்சி விலையானது அதிகரித்துள்ளது. 
 

உயரும் வெங்காயம் விலை

சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் விற்பனை விலையானது நாள்தோறும் ஏறி இறங்கி வருகிறது.  அந்த வகையில் தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சின்ன வெங்காயம் ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும்,  பச்சை மிளகாய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

உருளைக்கிழங்கு விலை என்ன.?

உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும்,  நெல்லிக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கு விற்பனை ஆகிறது.


கொத்தவரை விலை.?

அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது.

முள்ளங்கி விலை என்ன.?

முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கும், கத்திரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், பெரிய கத்திரிக்காய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீன்ஸ் ஒரு கிலோ 60 ரூபாய்க்கும், இஞ்சி ஒரு கிலோ 250 ரூபாய்க்கும், வெண்டைக்காய் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், முள்ளங்கி ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், பீர்க்கங்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கும், புடலங்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்பட்டு வருகிறது

Latest Videos

click me!