vegetables
காய்கறி விலை என்ன.?
சென்னை கோயம்பேடு காய்கறி சந்தையில் உருளைக்கிழங்கு ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், பீட்ரூட் ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், தக்காளி ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், நெல்லிக்காய் ஒரு கிலோ 102 ரூபாய்க்கும், குடைமிளகாய் ஒரு கிலோ 40 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
onion
உச்சத்தில் வெங்காயம் விலை
கடந்த சில நாட்களாக அதிகரித்து வந்த வெங்காயத்தின் விலையும் தொடர்ந்து உச்சத்தை நோக்கி செல்கிறது. அந்த வகையில் சின்ன வெங்காயமானது ஒரு கிலோ 110 ரூபாய்க்கும், பெரிய வெங்காயம் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும் விற்பனை செய்யப்படுகிறது. பாகற்காய் ஒரு கிலோ 35 ரூபாய்க்கும், சுரைக்காய் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், பட்டர் பீன்ஸ் ஒரு கிலோ 65 ரூபாய்க்கும், அவரைக்காய் ஒரு கிலோ 50 ரூபாய்க்கு முட்டைக்கோஸ் ஒரு கிலோ 15 ரூபாய்க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.
vegetables
முருங்கைக்காய் விலை என்ன.?
கேரட் ஒரு கிலோ 30 ரூபாய்க்கும், காலிபிளவர் ஒரு கிலோ 25 ரூபாய்க்கும், கொத்தவரை ஒரு கிலோ 40 ரூபாய்க்கும், வெள்ளரிக்காய் ஒரு கிலோ 15 ரூபாய்க்கும், முருங்கைக்காய் ஒரு கிலோ 100 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது.