அரசு ஊழியர்களின் பழைய ஓய்வூதிய திட்ட கோரிக்கையைத் தொடர்ந்து இதுகுறித்து அமைக்கப்பட்ட குழு தனது இடைக்கால அறிக்கையை சமர்ப்பித்துள்ளது. இந்த அறிக்கை மற்றும் கோரிக்கை குறித்து விவாதிக்க அரசு ஊழியர் சங்கங்களை தமிழக அரசு பேச்சுவார்த்தைக்கு அழைத்துள்ளது.
தமிழக அரசு ஊழியர்களுக்கு அகவிலைப்படி உயர்வு, ஊதிய உயர்வு, மருத்துவ வசதிகள், அரசு ஊழியர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்களுக்கு காப்பீடு, மகப்பேறு விடுப்பு, கடன் உதவி என பல சலுகைகளை வழங்கப்பட்டு வருகிறது. அப்படி இருந்த போதிலும் ஆசிரியர்கள் மற்றும் அரசு ஊழியர்களின் பல ஆண்டுகள் கோரிக்கையாக பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் நடைமுறைப்படுத்த வேண்டும் என தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர். இதற்காக முதல்வரின் கவனத்து கொண்டு செல்லும் வகையில் அவ்வப்போது போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.
25
ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு
இந்நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம், பங்களிப்பு ஓய்வூதிய திட்டம் மற்றும் ஒருங்கிணைந்த ஓய்வூதிய திட்டம் ஆகிய மூன்று ஓய்வூதிய முறைகள் குறித்தும் விரிவான ஆய்வு மேற்கொண்டு அரசுக்கு அறிக்கை அளிக்க மூத்த ஐஏஎஸ் அதிகாரியான ககன் தீப் சிங் பேடி தலைமையில் குழு கடந்த பிப்ரவரி மாதம் அமைக்கப்பட்டது. இந்த குழு 9 மாதங்களுக்குள் அரசுக்கு அறிக்கை சமர்ப்பிக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. அதன்படி, அரசு பணியாளர் சங்கங்களுடன் பல கட்டங்களாக ஆலோசனைகள் நடத்திய அந்த குழு, எல்ஐசி உள்ளிட்ட சம்பந்தப்பட்ட நிதி நிறுவனங்களுடனும் கலந்தாய்வுக் கூட்டங்களை நடத்தி கடந்த அக்டோபர் மாதம் ஓய்வூதிய திட்டங்கள் தொடர்பான இடைக்கால அறிக்கையை தமிழ்நாடு அரசிடம் அந்த குழு சமர்ப்பித்தது.
35
அரசு ஊழியர்கள் சங்கங்களை பேச்சுவார்த்தை
இதனையடுத்து இந்த இடைக்கால அறிக்கை தொடர்பாக அமைச்சர்கள் அமைச்சர்கள் எ.வ.வேலு, தங்கம் தென்னரசு மற்றும் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஆகியோர் ஆலோசனை மேற்கொண்டனர். இந்நிலையில் பழைய ஓய்வூதிய திட்டம் தொடர்பாக அரசு எடுத்துள்ள முடிவு தொடர்பாக ஆலோசிக்க அரசு ஊழியர்கள் சங்கங்களை பேச்சுவார்த்தைக்கு தமிழக அரசு அழைத்துள்ளது.
இதுதொடர்பாக தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில்: தமிழ்நாடு அரசு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்கங்களின் பல்வேறு கோரிக்கைகள் குறித்து வரும் 22ம் தேதியன்று காலை 10.00 மணி சென்னை, தலைமைச் செயலகம், நாமக்கல் கவிஞர் மாளிகையில் 10-வது தளத்தில் உள்ள ஆலோசனைக் கூடத்தில் தமிழ்நாடு ஊழியர்கள் மற்றும் ஆசிரியர் சங்க நிர்வாகிகளுடன் பொதுப் பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு மற்றும் பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி ஆகியோர் பேச்சுவார்த்தை நடத்த உள்ளனர்.
55
முதல்வர் மு.க.ஸ்டாலின் முடிவு
இந்த பேச்சுவார்த்தையின் போது பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவது தொடர்பாகவும், தமிழக அரசுக்கு அளிக்கப்பட்ட இடைக்கால அறிக்கை தொடர்பாக ஆலோசிக்கப்படவுள்ளது. து இந்த ஆலோசனைக்கு பிறகு முதலமைச்சர் கவனத்திற்கு கொண்டு செல்லப்பட்டு முக்கிய முடிவு எடுக்கப்படும்.