கார்த்திகை மாத சுபமுகூர்த்த நாட்களில் பத்திர பதிவு செய்ய மக்கள் அலைமோதுவதால், பதிவுத்துறை புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளது. அதன்படி, நவம்பர் 27 அன்று சார்பதிவாளர் அலுவலகங்களில் பத்திர பதிவுக்கான முன்பதிவு டோக்கன்களின் எண்ணிக்கை அதிகரிக்கப்பட்டுள்ளது.
மண்ணிலும், பொன்னிலும் முதலீடு செய்தால் என்றைக்கும் வீணாகாது என்பார்கள். அதற்கு ஏற்றார் போல தங்கம் விலையும், காலி மனைகளின் விலையும் கிடுகிடுவென உயர்ந்து வருகிறது. இதனால் இரண்டிலும் பொதுமக்கள் அதிகளவில் முதலீடு செய்து வாங்கி குவித்து வருகின்றனர். இந்நிலையில் இடம் மற்றும் காலி மனைகளை வாங்கும் போது நல்ல நாட்கள் சுபமுகூர்த்த நாளா என்று பார்த்து வாங்குவது வழக்கம். அந்த வகையில் சுப முகூர்த்த நாட்கள், விஷேச நாட்களில் பத்திர பதிவு அலுவலகத்தில் கூட்டம் அலைமோதும்.
24
கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு
இதனால் பத்திரப்பதிவு செய்ய முடியாமல் பெரும்பாலானோர் தவிக்கும் நிலைக்கு தள்ளப்படுவார்கள். இந்நிலையில் கார்த்திகை மாதத்தில் பத்திர பதிவு அலுவலகத்தில் பத்திர பதிவு செய்ய கூடுதல் டோக்கன்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
34
கார்த்திகை மாதம்
இது தொடர்பாக பதிவுத்துறை வெளியிட்டுள்ள அறிக்கையில்: சுபமுகூர்த்த தினங்கள் என கருதப்படும் நாட்களில் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் என்பதால் அன்றைய தினங்களில் பொதுமக்களின் கோரிக்கையை ஏற்று ஆவணப்பதிவுக்காக கூடுதல் முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யப்படுகிறது. தற்போது கார்த்திகை மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமான நவம்பர் 27ம் தேதியன்று கூடுதலாக முன்பதிவு வில்லைகள் ஒதுக்கீடு செய்யுமாறு பல்வேறு தரப்பு பொதுமக்களிடமிருந்து கோரிக்கைகள் பெறப்பட்டுள்ளன.
எனவே, கார்த்திகை மாதத்தில் வரும் சுபமுகூர்த்த தினமானநவம்பர் 27ம் தேதியன்று ஒரு சார்பதிவாளர் உள்ள அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 முன்பதிவு வில்லைகளும் இரண்டு சார்பதிவாளர்கள் உள்ள அலுவலகங்களுக்கு 200-க்கு பதிலாக 300 முன்பதிவு வில்லைகளும் அதிகளவில் ஆவணப் பதிவுகள் நடைபெறும் 100 அலுவலகங்களுக்கு 100-க்கு பதிலாக 150 சாதாரண முன்பதிவு வில்லைகளோடு ஏற்கெனவே வழங்கப்படும் 12 தட்கல் முன்பதிவு கூடுதலாக தட்கல் முன்பதிவு வில்லைகளும் வில்லைகளுடன் 4 பொதுமக்களின் பயன்பாட்டிற்காக வழங்கிட உத்தரவிடப்பட்டுள்ளது.