School Holiday
மாணவர்களுக்கு கொண்டாட்டம்
மாணவர்களுக்கு விடுமுறை என்றாலே கொண்டாட்டம் தான், அந்த வகையில் கடந்த சில மாதங்களாக சனி மற்றும் ஞாயிறு விடுமுறையோடு சேர்ந்து கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைத்தது. இதனால் தொடர் விடுமுறை கிடைத்ததால் மாணவர்கள் உற்சாகம் அடைந்தனர். சொந்த ஊருக்கும், சுற்றுலாவிற்கும் புறப்பட்டனர். இந்த நிலையில் வருகிற 2025ஆம் ஆண்டு பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு கூடுதல் விடுமுறை நாட்கள் கிடைக்கவுள்ளது. அதன் படி புத்தாண்டையொட்டி வருகிற புதன் கிழமை அரசு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
School Holiday
ஜனவரியில் தொடர் விடுமுறை
இதனை தொடர்ந்து பொங்கல் பண்டிகைக்கு தொடர்ந்து 6 நாட்கள் முதல் 9 நாட்கள் வரை விடுமுறை கிடைக்க வாய்ப்பு ஏற்பட்டுள்ளது. இந்தாண்டு பொங்கல் பண்டிகை வாரத்தில் இரண்டாவது நாளில் வருவதால் திங்கட்கிழமை அல்லது வெள்ளிக்கிழமைகளில் கூடுதல் விடுமுறை விடப்பட்டால் தொடர் விடுமுறை கிடைக்கும்,. இதனை தொடர்ந்து குடியரசு தினவிழா சனிக்கிழமையில் வரவுள்ளது. இந்த நிலையில் மாணவர்களுக்கு ஜாக்பாட் அடித்தது போல் ஜனவரி 10ஆம் தேதி பள்ளி, கல்லூரி மற்றும் அரசு அலுவலங்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
srirangam
திருச்சி ஸ்ரீரங்கம்- பரமபத வாசல்
பூலோக வைகுண்டம் என அழைக்கப்படும் திருச்சி ஸ்ரீரங்கம் அருள்மிகு அரங்கநாதர் சுவாமி திருக்கோவில். இந்த கோயிலில் வைகுண்ட ஏகாதேசி பெருவிழா விமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கமாகும். அந்த வகையில் வைகுண்ட ஏகாதசி திருவிழா இன்று முதல் தொடங்கப்படவுள்ளது.
21 நாட்கள் நடைபெறும் வைகுண்ட ஏகாதசி திருவிழாவின் முக்கிய நிகழ்ச்சியான பரமபத வாசல் திறப்பு வருகின்ற ஜனவரி 10 ஆம் தேதி நடைபெறவுள்ளது. இதனையொட்டி பல்வேறு மாவட்டங்களில் இருந்து திருச்சி ஸ்ரீரங்கத்துக்கு லட்சக்கணக்கான பக்தர்கள் வருவார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது.
sri rangam
திருச்சி உள்ளூர் விடுமுறை
இதனையொட்டி திருச்சி மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் பிரதீப் குமார் உத்தரவிட்டுள்ளார். இது தொடர்பாக வெளியாகியுள்ள அறிவிப்பில், திருச்சி மாவட்டத்தில் உள்ள பள்ளிகள், கல்லூரிகள், தமிழ்நாடு அரசின் கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து அரசு அலுவலகங்களுக்கும் ஜனவரி 10ஆம் தேதி விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார். மேலும் இந்த விடுமுறைக்குப் பதிலாக ஜனவரி 25 ஆம் தேதி வேலை நாளாக செயல்படும் என அறிவித்துள்ளார்.
school holiday
தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு
ஜனவரி 10ஆம் தேதி உள்ளூர் விடுமுறையாக அறிவிக்கப்பட்டாலும், திருச்சி மாவட்டத்தில் உள்ள அனைத்து துணை கருவூலங்களும், மாவட்ட கருவூலமும் பாதுகாப்பாக குறைந்த பணியாளர்களைக் கொண்டு செயல்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனிடையே ஜனவரி 10ஆம் தேதி வெள்ளிக்கிழமையாக வருவதால் பொங்கல் பண்டிகையையொட்டி பள்ளி மாணவர்கள் மற்றும் அரசு அலுவலகங்களுக்கு தொடர் விடுமுறை கிடைக்க வாய்ப்பு உருவாகியுள்ளது.