தமிழக எதிர்க்கட்சி தலைவர் எடப்பாடி பழனிசாமியின் சொந்த மாவட்டமான சேலத்தில் இருந்து தவெக தலைவர் விஜய் தனது அடுத்தக்கட்ட பிரசாரத்தை மேற்கொள்ள உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
கரூரில் நடைபெற்ற கூட்டநெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து தவெக தலைவர் விஜய் பிரசாரம் மேற்கொள்ளாமல் அமைதி காத்து வருகிறார். மேலும் மக்கள் சந்திப்பு நிகழ்ச்சியையும் தற்காலிகமாக நிறுத்தி வைப்பதாக அறிவித்தார். இதனிடையே சென்னையில் அண்மையில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் பேசிய விஜய் எனது அரசியல் பயணம் இன்னும் வேகமாகவும் தீவிரமாகவும் இருக்கும் என தெரிவித்தார்.
25
விஜய்க்கு கோரிக்கைவிடுத்த நிர்வாகிகள்
கூட்டத்தில் கலந்து கொண்ட நிர்வாகிகள், மாவட்ட செயலாளர்கள் கரூர், நாமக்கலில் பிரசாத்தை நிறைவு செய்துவிட்ட நிலையில் அண்டை மாவட்டமான சேலம் மாவட்டத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்க வேண்டும் என கோரிக்கை விடுத்துள்ளனர். அதனை விஜய்யும் ஏற்றுக் கொண்டதாக சொல்லப்படுகிறது. இதனால் சேலத்தில் விஜய்யின் வருகைக்கான முன்னேற்பாடுகளை அக்கட்சி நிர்வாகிகள் தீவிரமாக மேற்கொண்டு வருகின்றனர்.
35
துயர சம்பவத்தில் இருந்து மீளாத விஜய்
மேலும் இது தொடர்பாக சேலம் மாவட்ட தவெக நிர்வாகிகள் கூறுகையில், “கரூர் துயர சம்பவத்தில் இருந்து தலைவர் விஜய் இன்னும் மீண்டு வரவில்லை. சென்னையில் நடைபெற்ற கட்சியின் சிறப்பு பொதுக்குழு கூட்டத்தில் சேலத்தில் இருந்து பிரசாரத்தைத் தொடங்க கோரிக்கை விடுத்தோம். அதனை அவரும் ஏற்றுக் கொண்டார். ஆனால் எப்போது பிரசாரம் மேற்கொள்வார் என்ற அறிவிப்பை கட்சி தலைமை முடிவு செய்யும்.

55
எடப்பாடியை சீண்டும் விஜய்..?
கட்சி தலைமையின் வழிகாட்டுதலின் அடிப்படையில் எங்கு பிரசாரம் மேற்கொள்வது, பிரசாரத்திற்கான அனுமதி பெறுவது உள்ளிட்ட பணிகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவித்துள்ளனர். முன்னதாக விஜய் மேற்கொண்ட பிரசாரத்தின் போது அந்தந்த மாவட்ட பிரச்சினைகளை எடுத்துக்கூறி பிரசாரம் செய்தார். குறிப்பாக கரூரில் பாட்டிலுக்கு 10 ரூபாய் என பாடல் பாடி ஆளும் கட்சியை கடுமையாக விமர்சித்தார். அந்த வரிசையில் சேலம், எதிர்க்கட்சி தலைவரின் சொந்த மாவட்டம் என்பதால் அவரை விமர்சித்து பேசுவார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.