சுய தொழிலில் லட்சம் லட்சமாய் சம்பாதிக்க சூப்பர் சான்ஸ்! தமிழ்நாடு அரசு வெளியிட்டுள்ள குட் நியூஸ்!

Published : Nov 20, 2025, 08:27 AM IST

தமிழ்நாடு அரசு, தொழில் முனைவோரை ஊக்குவிக்கும் வகையில் அகர்பத்தி மற்றும் பூஜை பொருட்கள் தயாரிப்பு குறித்த இரண்டு நாள் சுயதொழில் பயிற்சியை வழங்குகிறது. சென்னையில் நடைபெறும் இந்த பயிற்சியில் 18 வயதுக்கு மேற்பட்ட தகுதியுடைய அனைவரும் பங்கேற்கலாம்.

PREV
14
தமிழ்நாடு அரசு சுயதொழில் பயிற்சி

பெண்களுக்கு உதவிடும் வகையில் மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது. அந்த வகையில், மானிய கடன் திட்டம், இலவச தையல் இயந்திரம், மகளிர்கள் சொந்த தொழில் செய்ய கடன் உதவி மற்றும் மகளிர் உரிமை தொகை உள்ளிட்ட பல திட்டங்கள் நடைமுறையில் இருந்து வருகிறது. இந்நிலையில் சொந்த தொழில் செய்பவர்களை ஊக்குவிக்கும் வகையில் தமிழ்நாடு அரசு சுயதொழில் பயிற்சி வழங்கி வருகிறது. இந்த பயிற்சியில் யாரெல்லாம் கலந்து கொள்ளலாம் எப்படி விண்ணப்பிப்பது குறித்தும் விவரங்கள் கொடுக்கப்பட்டுள்ளன.

24
அகர்பத்தி பொருட்களை உற்பத்தி

தமிழக அரசின் தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனத்தின் இரண்டு நாள் அகர்பத்தி பொருட்கள் தயாரிப்பு பயிற்சி வரும் நவம்பர் 25 முதல் 26 வரை காலை 10 மணி முதல் மாலை 5.00 மணி நடைபெற உள்ளது. இந்த முயற்சி, பாரம்பரிய மற்றும் அதிக தேவை உள்ள அகர்பத்தி பொருட்களை உற்பத்தி செய்ய தேவையான திறன்களும் அறிவும் கொண்ட தொழில்முனைவோர்கள் மற்றும் சிறு வணிக உரிமையாளர்களை ஊக்கப்படுத்த வடிவமைக்கப்பட்டுள்ளது.

34
பயிற்சியில் கற்றுக்கொடுக்கப்படும் தயாரிப்புகள்

3-இன்-1 அகர்பத்தி, 5-இன்-1 அகர்பத்தி, மூலிகை அகர்பத்தி, சாம்பிராணி, கணினி சாம்பிராணி, குங்கிலியம் சாம்பிராணி, எசென்ஷியல் ஆயில் அகர்பத்தி, கற்பூரக் கேக், ரோஜா நீர், பூஜை எண்ணெய் தயாரித்தல், மூலிகை மெழுகுவர்த்திகள், ஓமம் நீர், வெங்காயர் தயாரித்தல், சந்தன மாத்திரைகள், பித்தளை மற்றும் செம்பு சுத்திகரிப்பு பொடி, வெள்ளி சுத்திகரிப்பு திரவம், பித்தளை மற்றும் செம்பு சுத்திகரிப்பு திரவம் தயாரிக்க கற்றுக்கொடுக்கப்படும்.

44
முன்பதிவு அவசியம்

இந்த பயிற்சியில் பங்கேற்க விரும்பும் ஆண், பெண் மற்றும் திருநங்கைகள் 18 வயதிற்கு மேல் மற்றும் குறைந்தபட்சம் 10-ம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும். தங்கும் விடுதி வசதி குறைந்த கட்டணத்தில் வழங்கப்படும். பயிற்சிக்கு முன்பதிவு அவசியம். மேலும் விவரங்களுக்கு மற்றும் முன்பதிவிற்கு www.editn.in அல்லது 9360221280/9840114680 என்ற எண்களில் அலுவலக நேரத்தில் (திங்கள் முதல் வெள்ளி வரை காலை 10 மணி முதல் மாலை 5.45 மணி வரை) தொடர்புகொள்ளலாம். முன்பதிவு அவசியம். அரசு சான்றிதழ் வழங்கப்படும்.

முகவரி: தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாடு மற்றும் புத்தாக்க நிறுவனம், சிட்கோ தொழிற்பேட்டை, இ.டி.ஐ.ஐ அலுவலக சாலை, ஈக்காட்டுத்தாங்கல், சென்னை - 600 032.

Read more Photos on
click me!

Recommended Stories