கட்டிய தாலியின் ஈரம் காய்வதற்குள் புதுப்பெண் தூக்கிட்டு தற்கொலை! நடந்தது என்ன? பரபரப்பு தகவல்!
மணமக்களை பெண் வீட்டார் கதிர்நரசிங்கபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்கு வந்த சௌமியா பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
மணமக்களை பெண் வீட்டார் கதிர்நரசிங்கபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்கு வந்த சௌமியா பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார்.
தேனி மாவட்டம் ஆண்டிபட்டி அருகே கதிர்நரசிங்கபுரத்தைச் சேர்ந்தவர் பரமேஸ்வரன்(56). அரசு போக்குவரத்துக் கழகத்தில் பணிபுரிந்து வருகிறார். இவரது மகள் சவுமியா(24). பெரியகுளம் கல்லூரியில் இளங்கலை பட்டப்படிப்பு முடித்துள்ளார். இந்நிலையில் சௌமியாவுக்கு கம்பம் புதுப்பட்டியைச் சேர்ந்த ரவிச்சந்திரன் மகன் பாலாஜியை(27) என்பவரும் நிச்சயம் செய்யப்பட்டது.
இதையும் படிங்க: டாஸ்மாக் கடைகளுக்கு 4 நாட்கள் விடுமுறை! அதிர்ச்சியில் மதுப்பிரியர்கள்!
இதனையடுத்து திருமண ஏற்பாடுகள் விறுவிறுப்பாக நடந்து வந்தது. ஆனால், இந்த திருமணத்தில் சௌமியாவுக்கு விருப்பம் இல்லாமல் இருந்து வந்தார். இந்நிலையில் நேற்று முன்தினம் அதாவது ஜனவரி 31ம் தேதி கம்பத்தில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் இரு வீட்டார் பெற்றோர் மற்றும் சொந்த பந்தங்கள் முன்னிலையில் இவர்களுக்கு திருமணம் நடை பெற்றது.
பால், பழம் கொடுப்பதற்காக மணமக்களை பெண் வீட்டார் கதிர்நரசிங்கபுரத்துக்கு அழைத்துச் சென்றனர். வீட்டுக்கு வந்த சௌமியா பாத்ரூம் செல்ல வேண்டும் என்று கூறியுள்ளார். இதனையடுத்து படுக்கை அறைக்கு சென்ற சௌமியா ரூம் கதவை பூட்டிக்கொண்டார். பின்னர் நீண்ட நேரமாகியும் ரூம் கதவு திறக்காததால் அதிர்ச்சியடைந்த குடும்பத்தினர் நீண்ட நேரமாக தட்டியும் திறக்காததால் தாழ்ப்பாளை உடைத்து உள்ளே சென்று பார்த்த போது அங்கிருந்த மின்விசிறியில் சேலையால் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டுள்ளார். இதை கண்ட குடும்பத்தினர் பார்த்து அதிர்ச்சியில் அழுது கதறினர்.
இதையும் படிங்க: பொதுத்தேர்வு தேர்வு எழுதும் பத்தாம் வகுப்பு மாணவர்களுக்கு முக்கிய செய்தியை வெளியிட்ட தேர்வுத்துறை!
இந்த சம்பவம் தொடர்பாக போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. சம்பவ இடத்திற்கு விரைந்த போலீசார் சௌமியா உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது தொடர்பாக வழக்குப்பதிவு செய்து போலீசார் விசாரணையில் நடத்தியதில் தற்கொலை செய்து கொண்ட பெண்ணுக்கு திருமணத்தில் விருப்பம் இல்லாமல் இருந்துதுள்ளார். அதுமட்டுமல்லாமல் கன்னியாஸ்திரியாக போகிறேன் என்று சொல்லிக் கொண்டிருந்ததாக கூறப்படுகிறது. இருப்பினும் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது.