இனி தேர்வில் காப்பி அடிக்க முடியாது! மாணவர்களுக்கு செமையா ஸ்கெட்ச் போட்ட தேர்வுகள் இயக்ககம்!

Published : Feb 20, 2025, 01:47 PM ISTUpdated : Feb 20, 2025, 01:53 PM IST

தமிழகத்தில் பொதுத்தேர்வுகளில் விடைத்தாள் முறைகேடுகளைத் தடுக்க அரசு தேர்வுகள் இயக்ககம் புதிய கட்டுப்பாடுகளை விதித்துள்ளது. 

PREV
16
இனி தேர்வில் காப்பி அடிக்க முடியாது! மாணவர்களுக்கு செமையா ஸ்கெட்ச் போட்ட தேர்வுகள் இயக்ககம்!
இனி தேர்வில் காப்பி அடிக்க முடியாது! மாணவர்களுக்கு செமையா ஸ்கெட்ச் போட்ட பள்ளிக்கல்வித்துறை!

தமிழகத்தில் 10, 11 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு ஒவ்வொரு ஆண்டும் நடத்தப்பட்டு வருகிறது. எந்த முறைகேடுகளும் நடைபெறாமல் இருக்க அரசு தேர்வுகள் இயக்ககம் பல்வேறு நடைமுறைகளை செயல்படுத்தி வருகிறது. 

26
பொதுத்தேர்வு

தமிழ்நாட்டில் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 3ம் தேதி முதல் 25ம் தேதியும், 11ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு மார்ச் 5 முதல் 27 வரையும்,  10ம் தேதி வகுப்பு பொதுத் தேர்வினை பொறுத்தவரை மார்ச் 28 முதல் ஏப்ரல் 15 வரை நடைபெறுகிறது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் 10, 11, 12ம் பொதுத்தேர்வு எப்போது? எத்தனை லட்சம் பேர் எழுதுகிறார்கள்! இதோ முழு விவரம்!

36
பொதுத்தேர்வில் முறைகேடு

இந்நிலையில் மதுரையில் கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற 12ம் வகுப்பு பொதுத்தேர்வில் விடைத்தாளின் முதல் பக்கத்தை மாற்றி வேறு விடைத்தாளுடன் இணைத்து முறைகேட்டில் ஈடுபட்டது கண்டுபிடிக்கப்பட்டது. 

46
அரசுத் தேர்வுகள் இயக்ககம்

இதுபோன்ற விடைத்தாளில் முறைகேடுகளை தவிர்க்கும் விதமாக அரசுத் தேர்வுகள் இயக்ககம் விடைத்தாள்களின் பராமரிப்புப் பணிகளை நேரடியாக மேற்கொள்ள உள்ளது. 

இதையும் படிங்க: தமிழகத்தில் 10, 11, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு! முக்கிய அறிவிப்பை வெளியிட்ட தமிழக அரசு!

56
தேர்வுகள் இயக்ககத்தின் கண்காணிப்பில் விடைத்தாள்கள்

விடைத்தாளின் மாணவர்களின் விவரங்கள் இடம் பெற்றிருக்கும் முகப்புப் பக்கத்தை இதுவரை இணைக்கும் பணியை தேர்வு நடக்கும் பள்ளி தலைமை ஆசிரியர் மேற்கொண்டு வந்தனர். ஆனால், தற்போது ஒவ்வொரு மாவட்டத்திலும் மையங்கள் அமைத்து தேர்வுகள் இயக்ககத்தின் கண்காணிப்பில் விடைத்தாள்கள் இணைக்கும் பணியை மேற்கொண்டுள்ளது.

66
முகப்பு பக்கத்தில் மாணவர்களின் விவரங்கள்

முகப்பு தாள்களின் பக்கங்கள் கிழிந்திருந்தால் அந்த தேர்வு தாள் செல்லாது என்ற வகையில் அறிவிப்பை வெளியிட்டுள்ளது. மேலும் விடைத்தாள்களின் அனைத்து பக்கங்களும் இணைக்கப்பட்டு, முதல் பக்கத்தை எடுக்க முடியாத வகையில் மாணவர்களுக்கு வழங்கப்படும் எனவும் கூறப்படுகிறது. குறிப்பாக பொதுத்தேர்வின் போது வழங்கப்படும் விடைத்தாளின் முகப்பு பக்கத்தில் மாணவர்களின் விவரங்கள் இடம் பெறும் வகையில் வடிவமைக்கப்பட்டுள்ளது. 

Read more Photos on
click me!

Recommended Stories