Published : Feb 20, 2025, 01:21 PM ISTUpdated : Feb 20, 2025, 01:29 PM IST
சிவங்கை பாஜக கூட்டணி வேட்பாளர் தேவநாதன் யாதவ், முதலீட்டாளர்களிடம் 24 கோடி ரூபாய் மோசடி செய்த வழக்கில் கைது செய்யப்பட்டார். ஜாமீன் மனு தள்ளுபடி செய்யப்பட்டதால் தொடர்ந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ளார்.
பாஜக எம்.பி வேட்பாளர் தேவநாதன் யாதவ் சொத்துக்கள் முடக்கப்பட்டதா.? நீதிமன்றம் அதிரடி
இந்திய மக்கள் கல்வி முன்னேற்றக் கழக தலைவரான தேவநாதன் யாதவ், பாஜக கூட்டணியில் சிவகங்கை தொகுதியில் நாடாளுமன்ற தேர்தலில் போட்டியிட்டு தோல்வி அடைந்தார். இவர் சென்னை மயிலாப்பூர் தெற்கு மாட வீதியில் 150 ஆண்டுகள் பழமையான 'தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட்’இயக்குனராக உள்ளார். இந்த நிதி நிறுவனத்தில் 5ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தங்களது ஓய்வூதிய பணத்தை அனைத்தையும் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்துள்ளனர். மேலும் நிரந்தர வைப்பு தொகையும் வைத்துள்ளனர்.
25
நிதி நிறுவன மோசடி
மேலும் இந்த நிறுவனத்தில் பணத்தை முதலீடு செய்தால் அதிக வட்டி தருவதாகவும் ஆசை வார்த்தை கூறியுள்ளனர் இதனை நம்பியும் பலர் பணத்தை கட்டியுள்ளனர். ஆனால் உரிய வகையில் பணத்தை திரும்ப தராமல் ஏமாற்றியுள்ளனர். முதலீட்டாளர்களுக்கு இரண்டு வாரங்கள் தள்ளி தேதியிட்ட செக் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த செக்கும் வங்கியில் பணம் இல்லாமல் திரும்பி வந்தது. இதனிடையே பாதிக்கப்பட்ட மக்கள் கொடுத்த புகாரின் பேரில்,
35
ஜாமின் கோரி தேவநாதன் மனு
சென்னை மயிலாப்பூரில் செயல்பட்டு வந்த தி மயிலாப்பூர் இந்து பெர்மனெட் ஃபண்ட் நிதி நிறுவனத்தில் முதலீடு செய்த 144 முதலீட்டாளர்களிடம் 24 கோடியே 50 லட்சம் ரூபாய் மோசடி செய்ததாக அந்நிதி நிறுவனத்தின் இயக்குனர் தேவநாதன் யாதவ் உள்பட 6 பேரை பொருளாதார குற்றப்பிரிவு காவல் துறையினர் கைது செய்தனர். கடந்த ஆகஸ்ட் மாதம் கைது செய்யப்பட்ட நிலையில் 7 மாதமாக சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர். இந்த வழக்கில் ஜாமீன் கோரி தேவநாதன் உள்பட 3 பேர் தாக்கல் செய்த மனுக்களை ஏற்கனவே சென்னை உயர் நீதிமன்றம் தள்ளுபடி செய்த நிலையில்,
45
பதில் மனு தாக்கல் செய்ய அவகாசம்
இரண்டாவது முறையாக தேவநாதன் யாதவ் மற்றும் குணசீலன் ஆகியோர் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய்திருந்தனர். இந்த வழக்கு விசாரணை நீதிபதி சுந்தர் மோகன் முன்பு விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் வழக்கறிஞர் ராஜ் திலக் ஆஜராகி புலன் விசாரணை தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும், முழுமையாக விசாரணை நிறைவடையவில்லை என கூறினார். எனவே இந்த வழக்கில் பதில்மனு தாக்கல் செய்ய அவகாசம் வழங்க வேண்டும் என கேட்டுக்கொண்டார்.
55
சொத்துக்கள் முடக்கமா.?
மேலும் சுமார் 7 ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் தேவநாதன் யாதவ் நிதி நிறுவனத்தில் பணத்தை செலுத்தி பாதிக்கபட்டுள்ளதால், ஜாமீன் வழங்க கூடாது என எதிர்ப்பு தெரிவித்தார். இதையடுத்து நீதிபதி சுந்தர் மோகன் தேவநாதன் சொத்துக்கள் முடக்கப்பட்டுள்ளனவா? இல்லையா? என்பது குறித்து தெளிவுபடுத்த காவல்துறைக்கு உத்தரவிட்டு, வழக்கின் விசாரணையை மார்ச் 4ம் தேதிக்கு தள்ளிவைத்தார். இன்று நடைபெற்ற விசாரணையில் ஜாமின் தொடர்பாக நீதிபதி எந்த உத்தரவும் பிறப்பிக்காத காரணத்தால் தொடர்ந்து சிறையில் இரு்க்க வேண்டிய நிலை தேவநாதன் யாதவ்விற்கு ஏற்பட்டுள்ளது.