உருவாகிறது புதிய காற்றழுத்தத் தாழ்வு பகுதி! இனிமே தான் மழையின் ஆட்டமே இருக்கா? பாலச்சந்திரன் கூறுவதென்ன?

First Published | Dec 12, 2024, 6:12 PM IST

Tamilnadu Weather Update: தமிழகத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில், வரும் நாட்களில் மழையின் தாக்கம் மற்றும் புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகும் வாய்ப்பு குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் விளக்கம் அளித்துள்ளார். 

Tamilnadu Rain

வடகிழக்கு பருவமழை தொடங்கியதில் தமிழகத்தில் கனமழை பெய்து வரும் நிலையில் வரும் நாட்களில் மழையின் தாக்கம் எப்படி இருக்கும், புதிய உருவாக வாய்ப்பு உள்ளதா என்பது குறித்து தென்மண்டல வானிலை ஆய்வு மைய இயக்குநர் பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.

Balachandran

இதுதொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த அவர்: தற்போது உருவாகி இருக்கும் ஆழ்ந்த காற்றழுத்தத் தாழ்வு பகுதி 12 மணிநேரத்தில் காற்றழுத்தத் தாழ்வு பகுதியாக வலு குறையும். இதனைத்தொடர்ந்து அந்தமான் கடல் பகுதியில் டிசம்பர் 15ம் தேதி காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக வாய்ப்புள்ளது. அதன் நகர்வை பொறுத்தே  தமிழ்நாட்டில் மழை இருக்குமோ என கணிக்க முடியும். 

இதையும் படிங்க: 7 நாட்களுக்கு ஏழரையை கூட்டப்போகும் மழை! அதுமட்டுமல்ல இந்த மாவட்டங்களுக்கு ரெட் அலர்ட் எச்சரிக்கை!

Tap to resize

Heavy Rain

இன்று தென் தமிழகத்தில் நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய 3 மாவட்டங்களில் அதி கனமழைக்கு வாய்ப்பு உள்ளது. திருவண்ணாமலை, ராணிப்பேட்டை,  சென்னை, செங்கல்பட்டு, கள்ளக்குறிச்சி, பெரம்பலூர், திருச்சி, கரூர், திண்டுக்கல், திருப்பூர், கோவை உள்ளிட்ட 17 மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கனமழைக்கான வாய்ப்பு உள்ளது. 

Tamilnadu Rain News

வடகிழக்குப் பருவமழையைப் பொறுத்தவரையில், கடந்த அக்டோபர்1-ம் தேதி முதல் இன்று வரை 47 செ.மீ. பதிவாகியுள்ளது. வடகிழக்குப் பருவமழை இயல்பைவிட 16% அதிகம். மழை பெய்யும்போது பனிப்பொழி இருக்காது. காற்றழுத்த தாழ்வு பகுதியின் இயல்பால், விட்டு விட்டு மழை பெய்து வருகிறது. அது ஒரு வலு குறைந்த அமைப்பு என்பதால் அதில் நிறைய வேறுபாடுகள் இருக்கும். அதன் காரணமாக, ஏற்ற இறக்கத்துடன் மழைப்பொழிவு இருந்து வருகிறது. தற்போது வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வுப் பகுதி வலு குறையும். இதனால், மழையும் குறையும். காற்றில் அதிக ஈரப்பதம் இருப்பதால் பனிமூட்டம் போல் காணப்படுகிறது.

இதையும் படிங்க: அரையாண்டு தேர்வு ஒத்திவைப்பு! மீண்டும் தேர்வு எப்போது? மாணவர்களுக்கு வெளியான குட் நியூஸ்! 

Tamilnadu Weather

வானிலை பலவிதமான காரணிகளை கொண்டிருப்பதால் துல்லியாக கணிக்க இயலாது. இன்றைய சூழலில் புயல், கனமழை போன்றவற்றை கணிப்பது குறித்து முழுமையான அறிவியல் இல்லை. செயற்கைக்கோள், கணினி மாதிரிகளை வைத்தே வானிலை நிலவரங்களை கூறுகிறோம். புயலுக்குள் ஆய்வு விமானங்களை செலுத்தி விவரங்களை பெற்றுக் கூட வானிலை கணிப்பானது செய்யப்படுகிறது. ஆனால் அதுவும் சில நேரங்களில் தவறாகி விடுகிறது. தொழில்நுட்பத்தை வைத்து மட்டுமே வானிலையை துல்லியாக கணிக்க முடியாது. தொழில்நுட்பத்துடன் அறிவியலும் மேம்பட வேண்டும் என பாலச்சந்திரன் தெரிவித்துள்ளார்.  

Latest Videos

click me!