அதேபோல் திருப்பூரில் தனது பிறந்தநாள் விழாவையொட்டி பெண்ணியத்திற்காக ஓடு என்ற தலைப்பில் மாரத்தான் போட்டி நடைபெற்றது. இதில் வெற்றி பெற்ற மாணவர்களுக்கு பரிசு வழங்க வந்த டிடிவி. தினகரன் மேடையில் பேசிக் கொண்டிருந்தார். அப்போது, பரிசு வாங்க காத்திருந்த மாணவர்களில் ஒரு தரப்பினர் "கடவுளே அஜித்தே" என கோஷம் எழுப்பினர். இதனால் அதிர்ச்சியடைந்து தனது பேச்சை நிறுத்திய டிடிவி தினகரன், நிர்வாகிகள் மூலம் என்ன சொல்கிறார்கள் என கேட்டு தெரிந்து கொண்டார். இதுபோல அஜித் ரசிகர்கள் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களில் எல்லாம் கடவுளே அஜித்தே என்ற கோஷத்தை எழுப்பி வீடியோ வைரலாக்கி வந்தனர். இதை கண்டித்து அஜித் தரப்பில் அவரது மேலாளர் சுரேஷ் சந்திரா அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தார்.