வெளுத்துக் கட்டும் மழை; பூண்டி ஏரி திறப்பு; சென்னைக்கு வெள்ள அபாயம்; மக்களே உஷார்!

Published : Dec 12, 2024, 02:32 PM IST

பூண்டி ஏரியில் இருந்து தண்ணீர் திறக்கப்பட்டுள்ளதால் சென்னைக்கு வெள்ள அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

PREV
14
வெளுத்துக் கட்டும் மழை; பூண்டி ஏரி திறப்பு; சென்னைக்கு வெள்ள அபாயம்; மக்களே உஷார்!
Water released from Poondi Lake

ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு பகுதி காரணமாக தமிழ்நாடு முழுவதும் வட கிழக்கு பருவமழை தீவிரம் அடைந்துள்ளது. கடந்த 10 நாட்களுக்கு முன்பு பெஞ்சல் புயல் காரணமாக வரலாறு காணாத மழை பெய்ததால் விழுப்புரம், திருவண்ணாமலை, கடலூர் மாவட்டங்கள் வெள்ளத்தில் மிதந்தன. 

அதன்பிறகு தமிழ்நாட்டின் ஒருசில இடங்களில் பரவாலாக பெய்த நிலையில், நேற்று முதல் மழை மீண்டும் வேகமெடுக்கத் தொடங்கியுள்ளது. நெல்லை, தூத்துக்குடி, தென்காசி ஆகிய தென்மாவட்டங்களில் கனமழை வெளுத்து வாங்கி வருகிறது. மேலும் தலைநகர் சென்னையில் நேற்று மாலை முதல் அவ்வப்போது பலத்த மழை பெய்கிறது. 

24
Heavy Rain in Tamilnadu

சென்னை எழும்பூர், அண்ணா சாலை, கோடம்பாக்கம், நுங்கம்பாக்கம், சென்டிரல், கிண்டி ஆகிய பகுதியில் மழை வெளுத்துக்கட்டியது. சென்னை நகர் மட்டுமின்றி ஆவரி, அம்பத்தூர் போன்ற புறநகர் பகுதிகளிலும் திருவள்ளூர், செங்கல்பட்டு, காஞ்சிபுரம் மாவட்டங்களிலும் இடைவிடாது மழை கொட்டியது. 

தொடர் கனமழை காரணமாக சென்னைக்கு குடிநீர் ஆதரமாக திகழும் பூண்டி சத்தியமூர்த்தி ஏரிக்கு நீர்வரத்து அதிகமாக இருந்து வருகிறது. இதன் காரணமாக பூண்டி ஏரியில் இருந்து கொசஸ்தலை ஆற்றுக்கு 1,000 கன அடி விதம் தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

கிடு கிடுவென நிரம்பிய செம்பரம்பாக்கம்.! சென்னை மக்களுக்கு அலர்ட்.?

34
Rain in chennai

தொடர் மழை கொட்டி வருவதால் சென்னையின் முக்கியமான குடிநீர் ஆதாரமான செம்பரம்பாக்கம் ஏரியிலும் தண்ணீர் கிடுகிடுவென உயர்ந்தது. 24 அடி கொள்ளளவு கொண்ட செம்பரம்பாக்கம் ஏரியில் 21.18 கன அடி நீர்  எட்டி விட்டதால் இந்த ஏரியிலும் இருந்தும் விரைவில் தண்ணீர் திறக்கப்பட வாய்ப்புள்ளது. 

44
Flood in chennai

இதன் காரணமாக சைதாப்பேட்டை,  ஈக்காட்டுத்தாங்கல், ராமாபுரம், நந்தம்பாக்கம், திருநீர்மலை, குன்றத்தூர், திருமுடிவாக்கம், மணப்பாக்கம் ஆகிய பகுதிகளில் வெள்ளநீர் சூழ்ந்து விடும் என்பதால் முன்னெச்சரிக்கையாக  ஆபத்தான பகுதிகளில் மக்கள் வெளியேற்றப்பட்டு வருகிறது.

சென்னையில் விடாமல் கொட்டும் மழை.! எல்கேஜி மாணவர்களுக்கு கூட விடுமுறை அளிக்காத தனியார் பள்ளி

Read more Photos on
click me!

Recommended Stories