எந்த அளவுக்கு போதை நடமாட்டம் இருக்கு பாருங்க ஸ்டாலின்! வெளிச்சம் போட்டு காட்டும் இரட்டை கொலை சம்பவம்! விடாத L.முருகன்

Published : Mar 03, 2026, 02:14 PM IST

தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவை தடுக்க வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள்.

PREV
15
நாங்குநேரி இரட்டை கொலை

நெல்லை மாவட்டம் நாங்குநேரி பகுதியில் 3 இருசக்கர வாகனத்தில் வந்த 9 பேர் கொண்ட கும்பல் டீ கடையில் பெட்ரோல் குண்டு வீசி இரண்டு பேரை வெட்டி படுகொலை செய்யப்பட்ட சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 6 பேர் படுகாயங்களுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். இந்நிலையில் குற்றவாளிகளை பிடிக்க 10க்கும் மேற்பட்ட தனிப்படை அமைக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் காவல் துறை மீதும், இந்த அரசு மீதும் குற்றம் செய்பவர்களுக்கும் பயம் இல்லாததால் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன. தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது என எல்.முருகன் தனது எக்ஸ் தளத்தில் தெரிவித்துள்ளார்.

25
எல்.முருகன் கடுமையாக விமர்சனம்

அதில், திருநெல்வேலி மாவட்டம், நாங்குநேரி அருகே நேற்றிரவு இருசக்கர வாகனங்களில் வந்த ஒரு கும்பல், அப்பகுதியில் இருந்த அப்பாவி மக்கள் மீது சரமாரியாக தாக்குதல் நடத்தியுள்ளனர். போதையில் வந்த அந்த கும்பல், பயங்கர ஆயுதங்களை கொண்டு நடத்திய தாக்குதலில் இருவர் பரிதாபமாக உயிரிழந்துள்ளனர். 5 பேர் படுகாயம் அடைந்துள்ளனனர். இந்தச் சம்பவம் தமிழக மக்களை பெரும் அதிர்ச்சிக்குள்ளாக்கி இருக்கிறது.

35
சட்டம் ஒழுங்கு சந்தி சிரிக்கிறது

உயிரிழந்தவர்களின் குடும்பத்திற்கு எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொள்கிறேன். தாக்குதலில் காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டும் என இறைவனிடம் பிரார்த்தனை செய்கிறேன். தமிழகத்தில் கொடூர கொலைகளும், கொலை முயற்சி சம்பவங்களும் நடைபெறாத நாளே இல்லை என்று சொல்லும் அளவுக்கு சட்டம்- ஒழுங்கு சந்தி சிரிக்கிறது. பெண்கள், குழந்தைகள், முதியவர்களுக்கு எதிரான குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருகின்றன.

45
தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா?

போதை கும்பல்களை கட்டுப்படுத்த முடியாமல் போலி திராவிட மாடல் திமுக அரசு திணறுகிறது. திமுக ஆட்சியில் சட்டம் ஒழுங்கு எந்த அளவுக்கு சீர்குலைந்துள்ளது என்பதையும், போதைப் பொருட்களின் நடமாட்டம் தமிழகம் முழுவதும் புரையோடிப் போயிருப்பதையும் இந்த கொடூர சம்பவம் வெளிச்சம் போட்டுக் காட்டியிருக்கிறது. காவல் துறை மீதும், இந்த அரசு மீதும் குற்றம் செய்பவர்களுக்கும் பயம் இல்லாததால் தொடர் சம்பவங்கள் தமிழகத்தில் நடந்து வருகின்றன தமிழகத்தில் காவல்துறை இருக்கிறதா? என்ற சந்தேகமும் எழுகிறது.

55
தமிழக மக்கள் பாடம் புகட்டுவார்கள்

இந்த கொடூர கொலையில் ஈடுபட்ட குற்றவாளிகளை தமிழக காவல்துறையினர் உடனடியாக கைது செய்து அவர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். கொலை செய்யப்பட்டவர்களின் குடும்பங்களுக்கு உரிய இழப்பீடு வழங்குவதுடன், காயமடைந்தவர்களுக்கு தேவையான சிகிச்சை அளிக்க திமுக அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என கேட்டுக் கொள்கிறேன். தமிழகத்தின் சட்டம்- ஒழுங்கு சீர்குலைவை தடுக்க வேண்டிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் எதை பற்றியும் கவலைப்படுவதில்லை. மக்களின் பாதுகாப்பையும் மதிக்காத திமுக அரசுக்கு வரும் சட்டமன்றத் தேர்தலில் தமிழக மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள் என எல்.முருகன் ஆவேசமாக தெரிவித்துள்ளார்.

Read more Photos on
click me!

Recommended Stories